#NZvIND: 2-வது டி-20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி!

Ind vs NZ, 2nd T20I: Rohit Sharma to make three changes? | 3-வது வீரராக இளம் வீரர் ஷுப்மன் கில்லை களமிறக்க வாய்ப்புள்ளது. #NZvIND

news18
Updated: February 7, 2019, 9:47 PM IST
#NZvIND: 2-வது டி-20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
news18
Updated: February 7, 2019, 9:47 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் வெற்றி பெற்று முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்தது.

நேற்று (பிப்.6) நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவே டி-20 போட்டியில் இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டி-20 போட்டி ஆக்லாந்தில் நாளை (பிப்.8) நடக்கிறது.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)


2-வது போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும் என்பதால், வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது. 2-வது போட்டியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கும்.

கடந்த போட்டியில் 3-வது வீரராக களமிறங்கிய விஜய் சங்கர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, அந்த இடத்தில் ஷுப்மன் கில்லை களமிறக்க வாய்ப்புள்ளது. தினேஷ் கார்த்திக் நீக்கப்படலாம். மாற்று வீரர்கள் நிறைய இருப்பதால், சுழற்பந்து வீச்சில் சாஹலுக்கு ஓய்வு கொடுத்து குல்தீப் மாற்ற வாய்ப்புள்ளது.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
Loading...
ஆல்ரவுண்டர்கள் வரிசையில், விஜய் சங்கர் மற்றும் பாண்டியா சகோதர்கள் களமிறங்கலாம். வேகப்பந்து வீச்சில் கலீல் அகமது, புவனேஸ்குமார் ஆகியோர் கடந்த போட்டியில் அதிக ரன்கள் கொடுத்தனர். அதனால், இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

இந்திய உத்தேச அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், க்ருனல் பாண்டியா, குல்தீப் யாதவ், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.

ஐ.பி.எல் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

Also Watch...

First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...