முகப்பு /செய்தி /விளையாட்டு / IND vs NZ T20 : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது…

IND vs NZ T20 : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது…

இந்தியா - நியூசிலாந்து கேப்டன்கள்

இந்தியா - நியூசிலாந்து கேப்டன்கள்

இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் அணியில் இடம்பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் ஒரேயொரு மாற்றத்தை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா செய்திருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது.

இதையடுத்து தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் தற்போது தொடங்கியுள்ளது. டாஸில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் இடம்பெற்ற அதே வீரர்களுடன் நியூசிலாந்து அணி களம் காண்கிறது. இதன் அடிப்படையில் ஆடும் லெவனில் ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்ச்செல், மைக்கோல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, ஜேகப் டஃபி, லோகி பெர்கூசன், ப்ளெய்ர் டிக்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் அணியில் இடம்பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும்.

First published:

Tags: Cricket