ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பவுலிங்கில் மிரட்டிய இந்திய அணி… 108 ரன்களில் நியூசிலாந்து சுருண்டது…

பவுலிங்கில் மிரட்டிய இந்திய அணி… 108 ரன்களில் நியூசிலாந்து சுருண்டது…

இந்திய அணி

இந்திய அணி

அதிகபட்சமாக முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் நியூசிலாந்து 108 ரன்களில் ஆல் அவுட்ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்கில் மிரட்டிய சூழலில், இன்று டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் – டெவோன் கான்வே களத்தில் இறங்கினர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தில் போல்டாகி ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஹென்றி நிகோலஸ் களத்தில் இறங்கி விக்கெட்டை காப்பாற்றுவதற்காக நிதானமாக விளையாடினார். 20 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது, சிராஜ் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவரும் வெளியேறினார். 7ஆவது ஓவரை ஷமி வீசியபோது களத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்ச்செல் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க வீரர் டெவோன் கான்வே, ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விக்கெட்டுகள் மளமளவென விழுந்த நிலையில் கேப்டன் டாம் லாதம் சரிவை சரி செய்ய போராடினார். 17 பந்துகளை சந்தித்த அவர் 1 ரன் எடுத்து ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10.3 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதன்பின்னர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்று நேரம் தாக்குப்பிடித்தனர்.

அடுத்து களம் இறங்கியவர்களில் கிளென் பிலிப்ஸ் 52 பந்களில் 36 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 30 பந்துகளில் 22 ரன்களும், மிட்ச்செல் சான்ட்னர் 39 பந்துகளில் 27 ரன்களும் எடுத்ததால் அணியின் ஸ்கோர் 100-யை தாண்டியது. 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் தரப்பில் முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

First published:

Tags: Cricket