ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IND vs NZ 2nd ODI : டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது!! ஆடும் லெவனில் மாற்றமில்லை…

IND vs NZ 2nd ODI : டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது!! ஆடும் லெவனில் மாற்றமில்லை…

ரோஹித் சர்மா - டாம் லாதம்

ரோஹித் சர்மா - டாம் லாதம்

முதல் போட்டியில் களம் இறங்கிய அதே வீரர்களுடன் இந்திய அணி 2ஆவது ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியில் களம் இறங்கிய அதே வீரர்களுடன் இந்திய அணி 2ஆவது ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி கடைசி ஓவரில் 12 ரன்கள் வித்தியாசத்தில், திரில்லிங்கான வெற்றியை பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 208 ரன்கள் எடுத்து புதிய சாதனை ஏற்படுத்தினார்.

அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கடைசி ஓவர் வரை போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் மைக்கேல் பிரேஸ்வெல் 10 சிக்ஸர் 12 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் எடுத்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கலங்கடித்தார். 35 ஓவர்களுக்குள் இந்த போட்டி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் ஜோடி அற்புதமாக விளையாடி 7-வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தது. முதல் போட்டியில் இந்திய அணி கடும் போராட்டங்களுக்கு பின்னர் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்புரில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளார்.

கடந்த மேட்ச்சில் விளையாடிய சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் முகம்மது ஷமி மற்றும் முகம்மது சிராஜுடன் ரோஹித் சர்மா களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி விடும்.

First published:

Tags: Cricket