ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IND vs NZ : பரபரனு தொடங்கிய மேட்ச்.. குறுக்கே வந்த மழை.. ரசிகர்களை ஏமாற்றிய இரண்டாவது போட்டி!

IND vs NZ : பரபரனு தொடங்கிய மேட்ச்.. குறுக்கே வந்த மழை.. ரசிகர்களை ஏமாற்றிய இரண்டாவது போட்டி!

 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது

2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது

IND vs NZ : மழை விட்ட பின் ஆட்டம் தொடங்கிய பிறகு தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார், கில் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ஷிகர்தவான், சுப்மன்கில் களமிறங்கினர். இந்திய அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்ட்டது.

இந்த நிலையில் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. மழையால் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டதால், இந்த போட்டி 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதையும் படிங்க: அக்டோபர் 23.. என் மனதில் எப்பொழுதும் சிறப்பான நாள்.. ட்விட்டரில் நெகிழ்ந்த கோலி - அப்படி என்ன இருக்கு?

இதனையடுத்து மழை விட்ட பின் ஆட்டம் தொடங்கிய பிறகு தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார், கில் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நடுவர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

First published:

Tags: India vs New Zealand