• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Rahul Dravid| நியூசிலாந்து வீரர்களை மனிதாபிமானத்துடன் பார்க்கும் ராகுல் திராவிட்

Rahul Dravid| நியூசிலாந்து வீரர்களை மனிதாபிமானத்துடன் பார்க்கும் ராகுல் திராவிட்

ஹெட் கோச் ராகுல் திராவிட்

ஹெட் கோச் ராகுல் திராவிட்

  • Share this:
    இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-0 என்று கிளீன் ஸ்வீப் செய்து டி20 தொடரை வென்றது. 3வது போட்டியில் நேற்று 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா. ஆனால் டி20 உலகக்கோப்பை இறுதியில் ஆடிவிட்டு உடனே இங்கு தொடரை தொடர்ந்து ஆடுவது எந்த அணிக்கும் கடினமே என்று ராகுல் திராவிட் எதிரணியினரையும் மனிதாபிமானத்துடன் பார்க்கிறார்.

    கோலி கேப்டன்சியில் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வாய்ப்பு பெறாமல் வெளியேறிய நிலையில் புதிய கேப்டன் ரோகித் சர்மா, புதிய பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் கைக்கோர்த்து புதிய சகாப்தம் தொடங்கியுள்ளனர், அதன் ஆரம்பம்தான் இந்த 3-0 என்ற கிளீன் ஸ்வீப் வெற்றி.

    இது தொடர்பாக ராகுல் திராவிட் கூறும்போது, “இது உண்மையில் நல்ல தொடர் வெற்றி. அனைவரும் தொடர் முழுதுமே நன்றாக ஆடினர். நல்ல உணர்வு தோன்றுகிறது. நன்றாகத் தொடங்கிருப்பது அபாரம். நாங்களும் எதார்த்தமாகவே இருந்தோம். நாம் நம் கால்களை தரையில் ஊன்றி இந்த வெற்றியை எதார்த்தத்துடன் அணுக வேண்டும்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதியில் ஆடி விட்டு 48 மணி நேரத்தில் இங்கு வந்து தொடரில் ஆடுவதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அதுவும் 6 நாட்களில் 3 போட்டிகளை 3 வித்தியாசமான மைதானங்களுக்கு பயணம் செய்து ஆடுவதெல்லாம் பெரிய விஷயம். நம் பார்வையிலிருந்து இது நல்ல வெற்றிதான், ஆனால் இதிலேயே தங்கி விடாமல் அடுத்தடுத்து நகர்ந்து செல்ல வேண்டும்.

    அடுத்த 10 மாதங்கள் பெரிய பயணம் காத்திருக்கிறது. நாம் நம் ஏற்ற இறக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இளம் வீரர்கள் வந்து நன்றாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களாக வாய்ப்பு வழங்கப்படாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம். சில திறமைகள் நமக்கு கிடைத்திருப்பதை பார்க்கிறேன். மேன்மேலே செல்லும் போது இதே திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

    நம்மிடையே இத்தனை தெரிவுகள் இருக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது முதல் அடுத்த உலகக்கோப்பை வரை நீண்ட சீசன் காத்திருக்கிறது. அதற்குள் நம் அனுபவ வீரர்கள் எவ்வளவு கிரிக்கெட் ஆடுகின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும். இங்கிருந்து கான்பூருக்கு முதல் டெஸ்ட்டுக்கு 3-4 வீரர்கள்தான் செல்கின்றனர். 7:30 மணிக்கு எழுந்தாக வேண்டும். எனவே மற்ற வீரர்கள் லேட் நைட் கேளிக்கைகளில் ஈடுபடலாம்” என்றார் ராகுல் திராவிட்.

    Also Read: இந்தியா 3-0 கிளீன் ஸ்வீப் வெற்றி- ரோகித் சர்மா படை அசத்தல் - கப்டில் 51, மற்றவர்கள் அனைவரும் 60

    உண்மையில் ராகுல் திராவிடின் எதார்த்த மனோபாவம், இந்த வெற்றியை பெரிதாகக் கொண்டாடவில்லை, மாறாக நியூசிலாந்தின் கடினப்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு மனிதாபிமானத்துடன் அணுகுவதாகும். ரவிசாஸ்திரி, கோலி கம்பெனி என்றால் இதை வானளாவ பேசி, மார்தட்டி, ஒருவரையொருவர் கொம்பு சீவி விட்டுக் கொண்டிருப்பார்கள். திராவிட்னா வித்தியாசம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: