• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ராகுல் திராவிடைப் பார்த்ததும் உற்சாகத்தில் கொண்டாடிய ஜெய்பூர் ரசிகர்கள்

ராகுல் திராவிடைப் பார்த்ததும் உற்சாகத்தில் கொண்டாடிய ஜெய்பூர் ரசிகர்கள்

ராகுல் திராவிடுக்கு உற்சாக வரவேற்பு.

ராகுல் திராவிடுக்கு உற்சாக வரவேற்பு.

  • Share this:
    கோவிட்-19 பேரழிவுகளுக்குப் பிறகு இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டியில் ஜெய்பூர் மைதானத்திற்கு மீண்டும் ரசிகர்கள் திரும்பியது பெரு மகிழ்ச்சி என்றால், ராகுல் திராவிடை மைதானத்தில் பார்த்ததும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை அடக்க முடியாமல் ‘சுவர் திரும்பியது’ போன்ற வாசகங்களுடன் திராவிட் திராவிட் என்று கோஷமிட்டதும்  ரசிகர்களின் மனநிலையைப் பிரதிபலித்தது.

    தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஜெய்பூர் பிட்சில் என்ன இருக்கிறது என்று பிட்சில் வந்து பார்த்தவுடன் ரசிகர்கள் குஷி அடைந்து அவர் பெயரைக் கூறி உற்சாக கோஷமிட்டனர். திராவிடுக்கு பெரிய வரவேற்பை அளித்தனர். வெங்கடேஷ் அய்யருக்கும் அது பெரிய இரவாக அமைந்தது, இந்திய அணிக்காக முதல் முறையாகக் களம் காண்பதால் அவருக்கு தொப்பி அளிக்கப்படும் வைபவமும் ரசிகர்களின் குஷிக்கு மத்தியில் அரங்கேறியது.

    இந்திய அணியின் புதிய மாற்றத்தை ரசிகர்கள் விரும்புவதை அவர்களது மகிழ்ச்சி அறிவுறுத்தியது, வெங்கடேஷ் அய்யர் கடும் நெருக்கடியில் இறங்கினார், 10 ரன்கள் தேவை 6 பந்துகளில், ஆனால் முக்கியமான பவுண்டரியை அடித்தார், ஆனால் அடுத்த பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் ஆட்டமிழந்தார், முதல் போட்டியிலேயே ஹீரோவாகும் வாய்ப்பை அவர் இழந்து ஏமாற்றமளித்தது.

    ரோகித் சர்மா உற்சாகமாக ஆடினார், சூரியகுமார் யாதவ் எந்த வித அழுத்தமும் இல்லாமல் ஃப்ரீயாக ஆடியதைப் பார்க்க முடிந்தது, விராட் கோலி கேப்டன்சிக்கும் ரோகித் சர்மா கேப்டன்சிக்கு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது. கொஞ்சம் தோனி டச் ரோகித் சர்மாவிடம் தெரிந்தது.



    மேலும் அஸ்வினை தொடர்ந்து ஓரங்கட்டிய விராட் கோலி, ரவிசாஸ்திரி கூட்டணிக்கு மாற்றாக ரோகித் சர்மா-திராவிட் கூட்டணி அஸ்வினைப் பயன்படுத்தி அவரது திரமைகளை நன்றாகப் பயன்படுத்தியது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் கூட்டியுள்ளது. ஹர்திக் பாண்டியா இடத்தில் வெங்கடேஷ் அய்யர் நல்ல தெரிவு. இவர் பவுலிங்கும் வீசுவார், நல்ல பீல்டர் ஆகவே வெங்கடேஷ் அய்யருக்கு சில பல போட்டிகள் வாய்ப்பளிக்கப்படும். ஏனெனில் வீரர்கள் பாதுகாப்பாக உணரலாம் என்று திராவிட் அறிவித்தது, விராட் கோலியின் எடுத்தேன் கவிழ்த்தேன் அணுகுமுறைக்கு மாறானது என்பதை தெரிவிக்கவே.

    எனவே இளம் வீரர்கள் அச்சமின்றி தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். முதலில் தோல்வி பயத்தை விட்டொழிக்க வேண்டும். அதற்கு திராவிட்-ரோகித் சர்மா கூட்டணி நிச்சயம் உதவும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டே நடக்கவிருக்கிறது, அதற்கு ஒரு வலுவான அணியை திராவிட்-ரோகித் சர்மா கூட்டணி உருவாக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: