• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs New Zealand 2021| இந்தியா-நியூசிலாந்து டி20- நியூசிலாந்தின் முக்கிய ஆல்ரவுண்டரும் விலகல்

India vs New Zealand 2021| இந்தியா-நியூசிலாந்து டி20- நியூசிலாந்தின் முக்கிய ஆல்ரவுண்டரும் விலகல்

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து வீரர்கள்

  • Share this:
    ஐபிஎல் முடிந்த கையோடு உலகக்கோப்பை டி20, இது முடிந்த கையோடு டி20 உலகக்கோப்பை இறுதி வரை போராடிய நியூசிலாந்து அணியின் இந்தியத் தொடர். ஷெட்யூல் என்பது அறத்தை மீறிய செயலாக வீரர்களைச் சுரண்டும் நோக்கத்துடன் செய்யப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் நியூசிலாந்து டி20 அணியிலிருந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் விலகியுள்ளார்.

    ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதியில் விராட் கோலி தலைமை இந்திய அணிக்கு செம உதை கொடுத்த நியூசிலாந்து அணி நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் கடும் குழிப்பிட்ச்களை எதிர்கொள்ளும் என்பது எழுதப்படாத உண்மை. அல்லது வறண்ட ரன் மழை பிட்சைப் போட்டு விடுவார்கள்.

    இதனையடுத்து டெஸ்ட் போட்டித் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கம் என்பதால் இந்திய அணி உள்நாட்டுத் தொடரான இதில் வென்று பாயிண்டுகளை அதிகரிக்க விரும்பும், அதேதான் நியூசிலாந்து அணிக்கு நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆன நியூசிலாந்து இந்திய அணியை எழும்பவிடாமல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே கேன் வில்லியம்சன் இப்போது கைல் ஜேமிசன் டி20 தொடரிலிருந்து விலகி டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

    நவம்பர் 25ம் தேதி கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இன்று ஜெய்பூரில் இரவு 7 மணிக்கு முதல் டி20 போட்டி நடைபெறுகிறது, இதற்கு டிம் சவுத்தீ கேப்டனாக இருப்பார். உலகக்கோப்பை டி20 தோல்விகள் ஏற்படுத்திய காயங்களுக்கு இந்தத் தொடரில் வென்று இந்தியா மருந்திட விரும்பும். ஆனால் டி20-யில் கேன் வில்லியம்சன் இல்லாமல் நியூசிலாந்து அணி சப்பைதான். அதை ரோகித் சர்மா நன்றாகப் பயன்படுத்தி துவம்சம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: