• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கைல் ஜேமிசன் இத்தனை சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்னு எதிர்பார்க்கவில்லை- ஷுப்மன் கில்

கைல் ஜேமிசன் இத்தனை சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்னு எதிர்பார்க்கவில்லை- ஷுப்மன் கில்

கில் பவுல்டு

கில் பவுல்டு

  • Share this:
    கைல் ஜேமிசன் இந்தியா-நியூசிலாந்து கான்பூர் டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டத்தின் சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறும் ஷுப்மன் கில், அவர் இத்தனைச் சீக்கிரம் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

    ஷுப்மன் கில் 52 ரன்களில் உணவு இடைவேளைக்குப் பிறகு கைல் ஜேமிசனின் இன்ஸ்விங்கரில் ஆட்டமிழந்தார், அதை ரிவர்ஸ் ஸ்விங் என்கிறார் ஷுப்மன் கில். ஆனால் அந்த ஓவரின் முதல் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது, அது கால்காப்பில் படாமல் மட்டையில் பட்டதைப் பார்த்து கைல் ஜேமிசன் தலையில் கையை வைத்துக் கொண்டார்.

    ஷுப்மன் கில் அரைகுறையாக காலை முன்னால் குறுக்காகப் போட்டார், முழுதாக நீட்டி ஆடியிருந்தாலோ, மட்டைக்கும் கால்காப்புக்கும் இடைவெளி கொடுக்காமல் இருந்தாலோ பவுல்டு ஆகியிருக்க மாட்டார், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டுத்தானே சென்றது.

    இது தொடர்பாக ஷுப்மன் கில் கூறும்போது, “கைல் ஜேமிசன் முதல் ஸ்பெல்லில் அருமையாக வீசினார். லஞ்சுக்கு பிறகு எனக்கு நல்ல லெந்த்தில் வீசினார். அந்த ஓவர்களே அற்புதமாக அவருக்கு அமைந்தது. அதுவும் உணவு இடைவேளைக்குப் பிறகு வந்தவுடனேயே பந்தை ஜேமிசன் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

    இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் என்பது, நாம் பிட்சை விரைவு கதியில் கணிக்க வேண்டும். இந்த இன்னிங்ஸில் நான் எப்போதும் போல் பந்துகளை கணிக்கவில்லை. பந்து ரிவர்ஸ் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்பின்னர்களை நன்றாக ஆட முடிந்ததன் காரணம் வலைப்பயிற்சியில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேலை நான் எதிர்கொண்டு ஆடுகிறேன் என்பதால் .

    Also Read: அந்த சிங்கிளுக்கு புஜாரா ஓடிவந்திருந்தால் ஷுப்மன் கில் ஆட்டமிழந்திருக்க மாட்டார்

    நான் மிடில் ஆர்டரிலும் ஆடியிருக்கிறேன். மிடில் ஆர்டரில் ஆடுவது என்பது மனரீதியானது உத்தி ரீதியானது மட்டுமேயல்ல. ராகுல் திராவிட் சார் எங்களுடன் யு-19 முழுதும் இருந்துள்ளார். உலகக்கோப்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த யு-19 போட்டிகளிலும் ராகுல் திராவிட் இருந்ததால் இப்போது அவரது பயிற்சியும் உதவுகிறது” என்றார் ஷுப்மன் கில்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: