நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாப் வீரர்கள் சொதப்ப 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது, இந்திய அணியில் அஷ்வின், பிரித்வி ஷா இடம் பிடித்தனர்.
நியூசிலாந்து அணியில் ஜேமிசன் அறிமுகமானார். ராஸ் டெய்லர் தனது 100வது டெஸ்டில் களமிறங்கினார். டாஸ்'வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய பிரித்வி ஷா 16 ரன்களில் ஏமாற்றினார். மயங்க் அகர்வால் 34 ரன்கள் எடுத்து சற்றே ஆறுதல் தந்து அவுட் ஆனார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான விளையாடும் புஜாரா 11 ரன்களிலு, கேப்டன் கோலி 2 ரன்களிலும், விஹாரி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அனி
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ரகானே மற்றும் ரிஷாப் பண்ட் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.