Video: 150 கிமீ வேகத்தில் தவானை போல்டாக்கிய ‘யார்க்கர் பால்’!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஷிகர் தவான் போல்டான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Web Desk | news18
Updated: February 6, 2019, 9:19 PM IST
Video: 150 கிமீ வேகத்தில் தவானை போல்டாக்கிய ‘யார்க்கர் பால்’!
போல்டாகி வெளியேறிய ஷிகர் தவான். (Video Grab)
Web Desk | news18
Updated: February 6, 2019, 9:19 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானை 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்து போல்டாக்கியது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதித்தது.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)



இதனையடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் இன்று (பிப்.6) முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Shikhar Dhawan, ஷிகர் தவான்
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான். (Twitter)


போட்டியின் 6-வது ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் அசுர வேகத்தில் வீசிக்கொண்டிருந்தார். அந்த ஓவரின் 3-வது பந்தை 150 கிலோ மீட்டர் வேகத்தில் யார்க்கராக வீசினார். பந்தை சரியாக கணிக்காத ஷிகர் தவான் கிளீன் போல்டாகி பரிதாபமாக வெளியேறினார்.

Loading...




கண்ணிமைக்கும் நேரத்தில் ஷிகர் தவான் போல்டான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஏன் தோல்வி? கேப்டன் ரோகித் பதில்!

Also Watch...

First published: February 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...