லீசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 246/8 என்று டிக்ளேர் செய்தது தொடர்ந்து ஆடும் லீசெஸ்டர்ஷயர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் என்று திண்டாடி வருகிறது.
2 விக்கெட்டுகளையும் ஷமிதான் எடுத்தார். கேப்டன் சாம் இவான்ஸ் 22 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்து ஷமி பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் சுவர், தடுப்பணை செடேஷ்வர் புஜாரா மொத்தம் 6 பந்துகள் ஆடினார், ரன் எடுக்க முடியவில்லை, கடைசியில் நம் பவுலர் முகமது ஷமி பந்தை பின்னால் சென்று ஆட முயன்று இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். புஜாரா பூஜ்ஜியம்.
இப்போது வலது கை பேட்டர் லூயிஸ் கிம்பர் 31 ரன்களுடனும் ஜோயி எவிசன் 1 ரன்னுடனும் களத்தில் நிற்கின்றனர். இந்திய அணியில் முகமது ஷமி 2 விக்கெட்டுகள். உமேஷ் யாதவ் நன்றாக வீசினார். 5 ஓவர் 3 மெய்டன், 16 ரன் விக்கெட் இல்லை.
ஷர்துல் தாக்கூர் ஒரு ஓவர் 4 ரன்னையும் சிராஜ் ஒரு ஓவரை மெய்டனாகவும் வீசியுள்ளார். லீசெஸ்டர்ஷயர் அணியில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய அதிரடி மன்னன் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லீசெஸ்டர் ஷயர் சற்று முன் வரை 42/2 என்று ஆடி வருகிறது. முன்னதாக இந்திய அணி 246/8 என்ற நேற்றைய ஸ்கோரிலேயே டிக்ளேர் செய்தது, ஷமி 18 நாட் அவுட், ஸ்ரீகர் பரத் 70 நாட் அவுட்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.