ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா சொதப்பல் - 5 விக்கெட்டுகள் சரிவு-ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட்

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா சொதப்பல் - 5 விக்கெட்டுகள் சரிவு-ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட இந்திய அணி லீசெஸ்டர் அணிக்கு எதிராக 4 நாள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இந்தப் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், இந்திய அணி சற்று முன் வரை ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் அய்யர் விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து சொதப்பி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட இந்திய அணி லீசெஸ்டர் அணிக்கு எதிராக 4 நாள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இந்தப் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், இந்திய அணி சற்று முன் வரை ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் அய்யர், ஜடேஜா விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்து சொதப்பி வருகிறது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், ஜடேஜா, ஸ்ரீகர் பரத், ஷர்துல் தாக்கூர், ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ்.

லீசெஸ்டர் அணியில், சாம் இவான்ஸ், லூயிஸ் கிம்பர், புஜாரா, ரிஷப் பண்ட் (வி.கீ), ரெஹான் அகமது, ஜோயி எவிசன், சாம் பேட்ஸ், ரோமன் வாக்கர், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, வில் டேவிஸ், நேதன் பவுலி, அபிதின் சகாண்டே.

ரோஹித் சர்மா 3 பவுண்டரிகளுடன் 47 பந்தில் 25 ரன்கள் எடுத்து வாக்கரின் ஒன்றுமில்லாத பந்தை புல் ஷாட் ஆடுகிறேன் பேர் வழி என்று மிட்விக்கெட்டில் கொடியேற்றி கேட்ச் ஆனார். ஷுப்மன் கில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை போய் நோண்டி ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். இவர் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்தார்.

ஹனுமா விஹாரி 3 ரன்கள் எடுக்க 23 பந்துகள் ஆடி சொதப்பி ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் அய்யர் 11 பந்துகள் ஆடி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார், இவர் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார், கால்கள் நகரவேயில்லை, இன்சைடு எட்ஜில் கேட்ச் ஆனார்.

இப்போது விராட் கோலி 17 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 4 ரன்களுடன் ஆடிவருகிறார், ஜடேஜா 13 ரன்களில் வாக்கர் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார்.  இந்தியா 81/5.

பும்ரா 5 ஓவர் 20 ரன் விக்கெட் இல்லை. ரோமன் வாக்கர் என்ற ஊர் பேர் தெரியாத பவுலர் 5.3 ஓவர் 3 மெய்டன் 12 ரன் 3 விக்கெட். வில் டேவிஸ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்.

First published:

Tags: India Vs England