ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India vs Leicester- கத்துக்குட்டி பவுலரிடம் மடிந்த இந்திய  ‘ஸ்டார்கள்’- விராட் கோலியின் செம தடவல் இன்னிங்ஸ்

India vs Leicester- கத்துக்குட்டி பவுலரிடம் மடிந்த இந்திய  ‘ஸ்டார்கள்’- விராட் கோலியின் செம தடவல் இன்னிங்ஸ்

2 மணி நேரம் கிரீசில் நின்று 33 ரன்களுக்கு சிரமப்பட்ட கோலி

2 மணி நேரம் கிரீசில் நின்று 33 ரன்களுக்கு சிரமப்பட்ட கோலி

இந்திய அணிக்கும் லீசெஸ்டர் அணிக்கும் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து 81/5 என்ற சரிவிலிருந்து விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்தின் பேட்டிங்கினால் 246/8 என்ற சுமாரான நிலையை எட்டியது. முதல் நாள் முடிவில் ஸ்ரீகர் பரத் 70 ரன்களுடனும் ஷமி 18 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய அணிக்கும் லீசெஸ்டர் அணிக்கும் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து 81/5 என்ற சரிவிலிருந்து விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்தின் பேட்டிங்கினால் 246/8 என்ற சுமாரான நிலையை எட்டியது. முதல் நாள் முடிவில் ஸ்ரீகர் பரத் 70 ரன்களுடனும் ஷமி 18 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர்.

21 வயதேயான ரோமன் வாக்கர் என்ற ஸ்விங் பவுலரிடம் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா,ஹனுமா விஹாரி, போன்ற டாப் பேட்டர்களும் ஷர்துல் தாக்கூரும் ஆட்டமிழக்க அவர் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒரு முழுநேர இங்கிலாந்து கவுண்டி அணிக்கு எதிராக முதல் தர கிரிக்கெட் பாணியில் ஆடினால்தான் அது பயிற்சி, இப்படி இரு அணிகளும் வீரர்களை பரிமாறிக் கொண்டு ஆடினால் அது பேர் பிராக்டீஸ் மேட்சா? அதிலும் நம் ஆட்கள் ஆடிய ஆட்டம் செம தடவல் ரகம்.

ரோஹித் சர்மா சொத்தையான ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை ஹூக் செய்கிறேன் என்று கொடியேற்றி ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் அய்யர் பந்தை வழக்கம் போல் எட்ஜ் செய்து வெளியேறினர். ஹனுமா விஹாரிக்கு பந்தை அடிக்க முடியவில்லை, அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை, கோலி எப்போது வேண்டுமானாலும் எட்ஜ் ஆகிவிடுவேன் என்பது போல் ஆடினார். பிரசித் கிருஷ்ணா இவரையும் ஸ்ரேயஸ் அய்யரையும் படுத்தி எடுத்தார். ஆனால் பிரசித் கிருஷ்ணாவை ஒரு ஹூக் சிக்ஸ் ஒன்றும் அடித்தார் கோலி.

ஒருமுறை எட்ஜ் செய்தார் 3வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, ஆனால் நடுவர்கள் அது தரையில் பட்ட கேட்ச் என்று முடிவு கட்டினர். 33 ரன்களுக்கு விராட் கோலியின் இன்னிங்ஸ் பார்க்கவே அசிங்கமாக இருந்தது, நன்றாக ஆடவில்லை. விராட் கோலி கடைசியில் எல்.பி.என்று தீர்ப்பளிக்கப்பட்டார், ஆனால் அது இன்சைடு எட்ஜ் கேட்ச் என்றே தெரிகிறது, எப்படியோ அவர் அவுட், திருப்தியற்ற ஒரு 33 ரன்களை அவர் எடுத்தது, மூத்த வீரர்கள் வயதானோருக்கான காட்சிப் போட்டியில் ஆடுவார்களே அப்படித்தான் இருந்தது விராட் கோலியின் ஆட்டம்.

ஸ்ரீகர் பரத் 111 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 70 நாட் அவுட். ஷமி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள், நம் ஸ்டார்பேட்டரக்ளை விட ஸ்ரீகர் பரத், உமேஷ் யாதவ், ஷமி நன்றாக பேட் செய்தனர்.

First published:

Tags: India Vs England, Rohit sharma, Virat Kohli