முகப்பு /செய்தி /விளையாட்டு / India vs Ireland 2nd T20- 2-வது டி20: ராகுல் திரிபாதி, அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு?- இந்திய லெவன்

India vs Ireland 2nd T20- 2-வது டி20: ராகுல் திரிபாதி, அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு?- இந்திய லெவன்

ராகுல் திரிபாதி .

ராகுல் திரிபாதி .

இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையே இன்று (28-6-22) டப்ளின் மலஹைடில் 2வது டி20 போட்டி நடைபெறுகிறது, கடந்த போட்டியில் இந்திய அணி சவுகரியமாக வென்றாலும் அயர்லாந்து நன்றாகவே ஆடினர். குறிப்பாக அயர்லாந்து அணியில் 29 பந்துகளில் அரைசதம் கண்டு அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்த ஹேரி டக்கர் ஒரு அபாயகரமான பேட்டர் என்பதை நிரூபித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையே இன்று (28-6-22) டப்ளின் மலஹைடில் 2வது டி20 போட்டி நடைபெறுகிறது, கடந்த போட்டியில் இந்திய அணி சவுகரியமாக வென்றாலும் அயர்லாந்து நன்றாகவே ஆடினர். குறிப்பாக அயர்லாந்து அணியில் 29 பந்துகளில் அரைசதம் கண்டு அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்த ஹேரி டக்கர் ஒரு அபாயகரமான பேட்டர் என்பதை நிரூபித்தார்.

ஏனெனில் அன்று டெக்டர், இந்தியாவின் அதிவேக பவுலர் உம்ரன் மாலிக்கை ஆன் ட்ரைவ் பவுண்டரியும் பிறகு 145 கிமீ வேகப்பந்தை ஹூக் சிக்சும் அடித்தார். அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது, ஒரே ஓவர் 18 ரன்களைக் கொடுத்தார் உம்ரன், பந்தை அங்கும் இங்கும் ஸ்ப்ரே செய்தார்.

மாலிக் இன்று ஆடுவாரா, ராகுல் திரிபாதி ஆடுவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. அயர்லாந்தைப் பொறுத்தவரை பெரிய பிரச்சனை புவனேஷ்வர் குமார் தான். அவர் ஸ்விங்கை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதே அவர்கள் பவுலிங்கில் ஜோஷ் லிட்டில், மார்க் அடைர் போன்ற பவுலர்களிடம் நல்ல ஆக்‌ஷன் இருந்தாலும் ஷார்ட் பிட்ச் ஆகப் போட்டுப் போட்டு இஷான் கிஷனை அடிக்க விட்டார்கள்.

பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அயர்லாந்து பவர் ப்ளேயில் சவாலாக இருந்தால் இந்திய அணிக்குச் சமமாக நெருங்க முடியும் இல்லையெனில் இன்னொரு தோல்வியைத்தான் அயர்லாந்து சந்திக்கும்.

அயர்லாந்துக்கு இன்னொரு பயம் யஜுவேந்திர செஹல். பவுண்டரியே கொடுக்காமல் கடுங்குளிரில் பந்தை கிரிப் செய்வது கடினமாக இருந்தாலும் 3 ஓவர்களில் 11 ரன்களையே கொடுத்தார்.

top videos

    இந்திய லெவன்: இஷான் கிஷன், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார்யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங், செஹல், ஆவேஷ் கான்

    First published:

    Tags: India, Ireland, T20