Home /News /sports /

அக்தராவது, உம்ரன் மாலிக்காவது புவனேஷ்வர் குமார்தான் ஹை ஸ்பீடு!

அக்தராவது, உம்ரன் மாலிக்காவது புவனேஷ்வர் குமார்தான் ஹை ஸ்பீடு!

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார்

உலகின் அதிவேக பவுலர் ஷோயப் அக்தர், இவர் மணிக்கு 161.3 கிமீ வேகம் வீசியதுதான் இதுவரை பதிவான வேக வரலாற்றில் அதிவேக பவுலிங், இப்போது உம்ரன் மாலிக் ஐபிஎல் தொடரில் மணிக்கு 157 கிமீ வரை தொட்டார், இவரை லாக்கி பெர்கூசன் சற்றே பின்னடையச் செய்தார், ஆனால் இவர்களெல்லாம் யார்? ஒன்றுமேயில்லை என்பது போல் புவனேஷ்வர் குமார் வீசிய 2 பந்துகளுக்கான வேகம் 201 மற்றும் 208 என்று நேற்றைய முதல் டி20 போட்டியில் ஸ்பீடாமீட்டர் காட்ட ரசிகர்கள் அதிர்ச்சி நகைச்சுவையில் மூழ்கினர்.

மேலும் படிக்கவும் ...

    நேற்று புவனேஷ்வர் குமார் அற்புதமாக வீசினார், அதில் சந்தேகமில்லை, ஆனால் டப்ளினில் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் முதலில் 201 கிமீ வேகம் வீசியதாகவும் பிறகு அவர் சாதனையை அவரே அதே ஓவரில் பீட் செய்தது போல் 208 கிமீ வேகம் வீசியதாகவும் காட்டப்பட்டது, ரசிகர்களிடையே ஷோயப் அக்தர் வீசிய உலக சாதனை பந்தின் மீதே சந்தேகத்தை எழுப்பி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இது குறித்த நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் வைரல் ஆனது:

    இதையும் படிங்க: IRE vs IND: உம்ரன் மாலிக், சூரியகுமார் ஏமாற்றம்!- ஹூடா, புவனேஷ்வர், செஹல் அற்புதம்- இந்தியா வெற்றி

    தொழில்நுட்ப கோளாறுகளினால் இப்படி தவறு நிகழ்ந்தது ஒருபுறம் இருக்கட்டும், நாளை புவனேஷ்வர் குமார் உண்மையிலேயே மணிக்கு 150கிமீ வீசினால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் போலிருக்கிறதே!!
    Published by:Muthukumar
    First published:

    Tags: Bhuvneshwar Kumar

    அடுத்த செய்தி