இங்கிலாந்து வீரர்களை வாயடைக்க வைத்த விராட் கோலியின் அற்புத கேட்ச் - வைரல் வீடியோ

இங்கிலாந்து வீரர்களை வாயடைக்க வைத்த விராட் கோலியின் அற்புத கேட்ச் - வைரல் வீடியோ

விராட் கோலி

இங்கிலாந்து அணிக்க எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி அற்புத கேட்ச் ஒன்றை பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய 10 விக்கெட்கள் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி கடைசி வரை கடுமையாக போராடியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைவிட்ட நிலையில் 8-வது வீரராக களமிறங்கி சாம் கரன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

    சாம் கரன் கடைசி வரை போராடினாலும் இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்று தர முடியவில்லை. 95 ரன்கள் உடன் கடைசி வரை சாம் கரன் களத்தில் இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை அவர் தட்டி சென்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பேரிஸ்டோவ் பெற்றார்.

    நேற்றையப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு கேட்ச்களை விட்டனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரன் கேட்ச்களை தவறவிட்டார். சர்துல் தாகூர், தங்கராசு நடராஜனும் தங்கள் பங்குக்கு தலா ஒரு கேட்சை தவறவிட்டனர்.

    ஆனால் இவை அனைத்தையும் மறக்க வைக்கும் விதமாக கேப்டன் விராட் கோலி அற்புதமான ஒரு கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். கேப்டன் விராட் கோலி கேட்ச் பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    சர்துல் தாகூர் வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் வேமாக அடித்தார். அப்போது ஷாட் மிட்-ஆஃபில் ஃப்ல்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி பாய்ந்து அந்த பந்தை இடது ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்தார். அடில் ரஷித் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலியின் பெஸ்ட் கேட்ச்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.
    Published by:Vijay R
    First published: