பவுண்டரி எல்லையில் அசர வைக்கும் கேட்ச்... இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

ஹர்லின் தியோல் கேட்ச்

ஹர்லின் தியோலின் அசாத்திய ஃபல்டிங்க் மற்றும் கேட்சை விளையாட்டு பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

 • Share this:
  இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பவுண்டரி எல்லையில் இநதிய வீராங்கனை ஹர்லின் தியோல் பிடித்த அசாதரண கேட்ச் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் டிராவிலும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.

  இதனிடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் குவித்தது.

  Also Read : பிட்ச்சில் நடனமாடி பந்துவீச்சாளரை கடுப்பேற்றிய வங்கதேச பேட்ஸ்மேன்.. டெஸ்ட் மேட்ச்சில் சுவாரஸ்யம்..!

  இந்தப் போட்டியின் போது இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பிடித்த கேட்ச் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து வீராங்கனை எமி ஜோன்ஸ் இறங்கி வந்து பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார். பவுண்டரி எல்லையில் ஃப்லிடிங்கில் இருந்த ஹர்லின் தியோல் அந்த பந்தை பாய்ந்து கேட்ச் பிடித்தார்.  இந்த கேட்ச் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஹர்லின் தியோலின் அசாத்திய ஃபல்டிங்க் மற்றும் கேட்சை விளையாட்டு பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

  Also Read :  எம்.எஸ். தோனியின் புகழ்பெற்ற 7-ம் எண் ஜெர்சியும் ரிட்டையர் ஆகிறது?

  ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்த்தித்து. இந்திய அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது. இதை தொடர்ந்து டக்லஸ் லூயிஸ் விதியின் படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: