CRICKET INDIA VS ENGLANDR ASHWIN GOES PAST JACQUES KALLIS GARY SOBERS WITH HUNDRED AND 5 WICKET HAUL IN CHENNAI TEST MUT
8-ம் நிலையில் இறங்கி அதிரடி சதம்: , போத்தம், ஜாக் காலிஸ், கேரி சோபர்ஸைக் கடந்த மண்ணின் மைந்தன் அஸ்வின்
அஸ்வின் விளாசிய சதம்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று முன்னணி பேட்ஸ்மென்கள் கடும் சுழலில் சிக்கி சின்னாபின்னமாக மிகக்கடினமான பிட்சில் மண்ணின் மைந்தன் அஸ்வின் அதிரடி சதம் எடுத்து தனது டெஸ்ட் 5-வது சதத்தை எடுத்து முடித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று முன்னணி பேட்ஸ்மென்கள் கடும் சுழலில் சிக்கி சின்னாபின்னமாக மிகக்கடினமான பிட்சில் மண்ணின் மைந்தன் அஸ்வின் அதிரடி சதம் எடுத்து தனது டெஸ்ட் 5-வது சதத்தை எடுத்து முடித்தார்.
இன்னிங்சின் 82வது ஓவரில் மொயின் அலி வீச சிராஜ் சிங்கிள் எடுத்து அஸ்வினிடம் ஸ்டரைக் கொடுக்க ஆஃப் ஸ்டம்பில் வந்த பந்தை அஸ்வின் சேவாக் பாணியில் ஸ்லாக் ஸ்வீப் செய்து மிட்விக்கெட் மீது ஒரே தூக்குத் தூக்க பந்து ஸ்டேடியத்தில் போய் விழுந்தது, சிக்சர். 91லிருந்து ஒரே அடியில் 97 ரன்களுக்கு வந்தார் அஸ்வின்.
அடுத்த ஃபுல்டாஸ் பந்தை இன்சைடு அவுட் போய் 2 ரன்களுக்குத் தட்டி விட்டு 99 ரன்களுக்கு வந்தார். அடுத்த பந்தே மீண்டும் தேர்ட்மேன் திசையில் பவுண்டரி பறக்க அஸ்வின் 134 பந்துகளில் சதம் கண்டார்.
இது இவரது 5வது டெஸ்ட் சதம், இதற்கு முன்னதாக அவர் 4 டெஸ்ட் சதங்களை மே.இ.தீவுகளுக்கு எதிராக மட்டுமே எடுத்தார். ஆனால் இந்தச் சதம் மிகவும் விசேஷமானது, ஏனெனில் 5 விக்கெட்டுகள் ஒரு சதம் என்பது ஒரு ஆல்ரவுண்டருக்கு மிக முக்கியமான சாதனை.
தற்போது அவர் 103 ரன்களில் 14 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசி ஆடி வருகிறார். சிராஜ் 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் எடுத்து ஆடிவர இந்திய அணி 284/9 என்று உள்ளது.
மேலும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்குப் பிறகு இந்திய அணிக்காக சென்னை மண்ணில் சதம் எடுத்த தமிழ்நாடு வீரர் ஆனார் அஸ்வின். ஸ்ரீகாந்த் பாகிஸ்தான புரட்டி எடுத்து 123 ரன்கள் விளாசியதற்குப் பிறகு இப்போதுதான் தமிழக வீரர் ஒருவர் சதம் எடுக்கிறார்.
ஒரே டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் சதம் என்ற டபுள் சாதனையை மூன்று முறை செய்து போத்தம், ஜாக் காலிஸ், கேரி சோபர்ஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்டாக் முகமது ஆகியோரைக் கடந்து சென்றார் அஸ்வின்.
அஸ்வின் 106 ரன்களில் கடைசியில் ஸ்டோன் பந்தில் பவுல்டு ஆனார். 14 பவுண்டரிகள் 1 சிக்சரை விளாசினார். இந்திய அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இங்கிலாந்துக்கு 481 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு சதம் அடித்த முதல் வீரர் ஆனார். விராட் கோலி சதமெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 62 ரன்களில் மொயின் அலியிடம் எல்.பி.ஆனார்.