டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் ஏன் இப்படி?- 5வது நாள் மழை என்றால் அவ்வளவுதானா?

நாட்டிங்காம் பிட்ச்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பிரமாதமான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட ஆட்டம் ட்ரா ஆனது, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் அங்கம் என்பதால் புள்ளிகள் பகிரப்பட்டன.

 • Share this:
  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பிரமாதமான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட ஆட்டம் ட்ரா ஆனது, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் அங்கம் என்பதால் புள்ளிகள் பகிரப்பட்டன.

  மழை பெய்தால் அது மழைதான் மாற்று ஏற்பாடுகள் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, வர்த்தக ரீதியாகவும் ஒளிபரப்பு உரிஅமி பெற்ற சேனல்களுக்கு, ஸ்பான்சர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஒருநாள் போட்டிகளில் டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்படுவத் போல் இதில் ஒருநாள் எக்ஸ்ட்ரா வைக்கலாம்.

  முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகளில் ரெஸ்ட் டே என்ற ஒன்று உண்டு, இது போன்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு ஒருநாள் ஆட்டம் கைவிடப்படும் நிலையில் அந்த நாள் ஓய்வு நாளாக எடுத்துக் கொள்ளப்பட்டு டெஸ்ட் போட்டி நடைபெறும். இப்போது மிகவும் கண்டிப்பாக மழை வந்து, அதுவும் கடைசி நாளில் கைவிடப்பட்டால் ட்ரா என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவாக உள்ளது.

  இந்திய ரசிகர்கள் பலரும் அப்படித்தான் உணர்கின்றனர். டெஸ்ட் போட்டி என்ற வடிவத்தை ஒருநாள், டி20 அழிக்கும் என்பதை விட மாறிய வானிலையில் மழை பெரிய அளவில் பாதித்து வருகிறது, இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழும்பி வருகின்றன.

  ஒரு பக்கம் மாற்று ஏற்பாடாக கூடுதல் ரிசர்வ் தினம் வைத்தால் ஐபிஎல் போட்டிகள் சிக்கலாகி விடும் என்று பிசிசிஐ ஒரு பக்கம் இந்த முடிவை ஏற்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

  இந்நிலையில் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ள கருத்துகள் இதோ:  இவ்வாறு தங்கள் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: