கேட்கல... சத்தமா... சேப்பாக்கம் மைதானத்தில் 'பிகில்' விஜய்யாக மாறிய விராட் கோலி - வீடியோ

கேட்கல... சத்தமா... சேப்பாக்கம் மைதானத்தில் 'பிகில்' விஜய்யாக மாறிய விராட் கோலி - வீடியோ

விராட் கோலி

India vs England | Virat Kohli | விசில் சத்தம் கேட்கவில்லை மீண்டும், மீண்டும் வேகமாக என்று சைகை செய்தார்.

 • Share this:
  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களை விசில் போட வைத்து கேப்டன் விராட் கோலி உற்சாகப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 249 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

  இதனிடையே 2-ம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி விக்கெட்களை இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அவுட்டாக்கினார்கள். இதனால் குதூகலமடைந்த கேப்டன் விராட் கோலி இந்திய வீரர்களை இன்னும் உற்சாகப்படுத்த விசில் அடிக்க சொல்லி உற்சாகப்படுத்தினார்.  விசில் சத்தம் கேட்கவில்லை மீண்டும், மீண்டும் வேகமாக என்று சைகை செய்தார். பிகில் படத்தில் நடிகர் விஜய், கேட்கல... சத்தமா என்று சொல்வது போல் விராட் கோலியும் கேட்கல, இன்னும் சத்தமா என்று சொல்லி ரசிகர்களை ஆரவாரப்படுத்தி குஷிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  கொரோனா ஊரடங்கிற்கு பின் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு  அனுமதி அளித்திருப்பது சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தான். நீண்ட நாட்களுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: