• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • எப்படியிருந்தாலும் 60 ஓவர்களில் இங்கிலாந்தை ‘ஃபினிஷ்’செய்வதே திட்டம்: விராட் கோலி பெருமிதம்

எப்படியிருந்தாலும் 60 ஓவர்களில் இங்கிலாந்தை ‘ஃபினிஷ்’செய்வதே திட்டம்: விராட் கோலி பெருமிதம்

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 புள்ளிகளைப் பெற்று, மொத்தம் 14 புள்ளிகளைப் பெற்றது. இங்கிலாந்தை 60 ஓவர்களுக்குள் எப்படியிருந்தாலும் மடிப்பதே திட்டம் என்கிறார் விராட் கோலி.

 • Share this:
  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 புள்ளிகளைப் பெற்று, மொத்தம் 14 புள்ளிகளைப் பெற்றது. இங்கிலாந்தை 60 ஓவர்களுக்குள் எப்படியிருந்தாலும் மடிப்பதே திட்டம் என்கிறார் விராட் கோலி.

  5ம் நாள் ஆட்டத்தில் காலை நிலவரப்படி இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது, ஆனால் இங்கிலாந்து பழிதீர்க்கும் மனோபாவத்தில் பும்ராவையும் ஷமியையும் அடித்துக் காயப்படுத்தும் நோக்கத்தில் வீசி செம பல்பு வாங்கியது. இங்கு தான் இங்கிலாந்து மேட்சைக் கோட்டை விட்டது.

  பவுலிங்கில் இந்திய அணி செம கலக்கு கலக்கினர், இது போன்ற ஒரு ஆக்ரோஷமான பந்து வீச்சை இதுவரை இந்த இந்திய அணியிடம் பார்த்ததில்லை. பிரிஸ்பன், மெல்போர்ன் வெற்றிகளை விடப் பெரிய வெற்றியாகும் இது.

  Pls Read this: Lords test India win|ஆண்டர்சனுக்காக பழிதீர்க்கப் போய் பல்பு வாங்கிய இங்கிலாந்து: இந்திய ஆக்ரோஷத்துக்கு சரணடைந்து படுதோல்வி

  உண்மையில் விராட் கோலி தன் பேட்டிங் தோல்விகளுக்கு ஆக்ரோஷம் மூலம் பதிலீடு செய்து வெற்றியை சாதித்துக் காட்டியுள்ளார்.

  வெற்றிக்குப் பிறகு விராட் கோலி கூறியதாவது:

  இந்திய அணி குறித்து சூப்பர் பெருமையடைகிறேன். திட்டத்துக்கு ஒப்ப ஆடியது பிரமாதம், பேட்டிங்கில் கொடுத்த ஃபைட் அபாரம். முதல் 3 நாட்களில் பிட்ச் பெரிதாக உதவவில்லை. ஆனால் கடும் அழுத்தத்தில் 2வது இன்னிங்சில் நாம் ஆடிய விதம் அற்புதம். பும்ரா, ஷமி அபாரம்.

  60 ஓவர்களில் எப்படியிருந்தாலும் இங்கிலாந்தை சுருட்டவே திட்டமிட்டோம். களத்தில் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டது, ஆனால் அதுதான் வெற்றி பெற உத்வேகமாக அமைந்தது. அதனால்தான் ஆட்டத்தை பினிஷ் செய்ய முடிந்தது.

  Also Read: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரில் முன்னிலை!

  ஏன் கரகோஷம் செய்ய வேண்டியிருந்ததால் ஷமி, பும்ரா எப்படி ஆடினார்கள் அவர்களின் ஆட்டம் நம்மை எங்கு கொண்டு நிறுத்தியுள்ளது என்பதை அறிவுறுத்தவே. பேட்டிங்கில் சாதித்த பிறகு புதிய பந்தில் வந்தவுடன் விக்கெட்டுகளை இருவரும் சாய்த்தனர். நாம் வெற்றி பெறும்போதெல்லாம் கீழ்வரிசை பேட்டிங் பங்களிப்பு செய்துள்ளது.

  அவர்கள் பயிற்சியாளர்களுடன் கடினமாக உழைப்பைப் போட்டனர். நம்பிக்கையும், ஆசையும் அபரிதமாக அவர்களிடம் உள்ளது. கடந்த லார்ட்ஸ் வெற்றி ஸ்பெஷல் இஷாந்த் சர்மா அப்போது பயங்கரமாக வீசினார். ஆனால் இன்று 60 ஓவர்களில் பினிஷ் செய்ய வேண்டும், பினிஷ் செய்தோம் என்பது அதை விடவும் சிறப்பு.

  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ஆடும் சிராஜ் போட்ட பவுலிங் அபாரமானது. 60 ஓவர்கள்தான் அதற்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் எங்களுக்கு உத்வேகம் அளித்தது. ரசிகர்கள் எங்களுக்கு கடுமையாக ஆதரவு அளித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தியாவின் சுதந்திரதினத்துக்கு நாங்கள் அணிக்கு கொடுத்த பரிசே இந்த வெற்றி. ஆனால் இன்னும் 3 டெஸ்ட்கள் உள்ளன, இந்த வெற்றியின் புகழில் அமர்ந்து விடக்கூடாது. ஆலி ராபின்சனுக்கு ரிவியூ செய்தது ஒரு உள்ளுணர்வுதான், நான் எப்போதும் உள்ளுணர்வை நம்புபவன்.

  இவ்வாறு கூறினார் விராட் கோலி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: