• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Lord's Test| லார்ட்ஸ் டெஸ்ட்டிலும் அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார்? - விராட் கோலி சூசகம்

Lord's Test| லார்ட்ஸ் டெஸ்ட்டிலும் அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார்? - விராட் கோலி சூசகம்

அஸ்வின்

அஸ்வின்

காயமடைந்த ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அஸ்வினை அணியில் சேர்க்கும் திட்டமில்லை என்பதை விராட் கோலி நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    காயமடைந்த ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அஸ்வினை அணியில் சேர்க்கும் திட்டமில்லை என்பதை விராட் கோலி நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

    அதாவது 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற சேர்க்கைக்குத்தான் முக்கியத்துவம் ஏனெனில் லார்ட்சிலும் மழை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஸ்பின் எடுபடாது, 2 ஸ்பின்னர்கள் அனாவசியம் என்று கோலி கருதுவது அவரது பேட்டியிலிருந்து தெரிகிறது.

    ஷர்துல் தாக்கூர் பேட்டிங் ஆல்ரவுண்டராக அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் பவுலிங் நன்றாக வீசினார், பேட்டிங்கில் டக் அடித்தார், அதனால் அவர் உட்கார வைக்கப்படவில்லை, அவருக்கு இடது தொடை சதையில் காயம் ஏற்பட்டுள்ளதால் உட்கார வைக்கப்படுகிறார்.

    Also Read: லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் 11 வீரர்கள் யார்?

    இவருக்குப் பதில் இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது, ஆகவே அஸ்வின் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் சதமும் அடித்தார், பவுலிங்கிலும் அருமையாக வீசி வருகிறார், ஆனால் யாருக்கு எது அருமையாக வருமோ அதில் அவரை வீழ்த்துவதுதான் கோலியின் கேப்டன்சி திறமை!!

    இந்நிலையில் கோலி கூறியதாவது:

    “ஜடேஜா பேட்டிங்கில் அரைசதம் எடுத்ததும் பின் வரிசை வீரர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு செய்வதும் அணியின் பேட்டிங் கவலைகளைப் போக்கி விட்டது. ஷர்துல் பேட்டிங் திறமையை அணிக்குக் கொண்டு வந்துள்ளார். பேட்டிங்கில் நான், புஜாரா, ஜிங்க்ஸ் (ரகானே) ஆகியோர் இருக்கின்றோம். ரோகித், கே.எல்.ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடினர்.

    ஆகவே பேட்டிங் யூனிட்டாக நல்ல நிலையில்தான் இருக்கிறோம். அதனால் ஷர்துல் ஆடவில்லை எனில் ஒரு பேட்டிங் போய்விட்டது என்று அர்த்தமல்ல, ஆனால் 4 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சு அணிக்கு மிக முக்கியம்.

    மேலும் 20 இங்கிலாந்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும், அதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவே பேட்டிங்கில் ரன்கள் எடுக்கும் இன்னொரு வீரர் தேவையில்லை என்றே கருதுகிறோம். முதல் டெஸ்ட் போட்டி வென்ற விதம் குறித்து சவுகரியமாகவே உணர்கிறோம்.

    4 வேகப்பந்து வீச்சாளர்கள் எனும்போது எதிரணிக்கு பிரஷர் போட முடியும். 4 பவுலர்களில் யாரையும் குறைவாகப் பயன்படுத்த மாட்டோம். விக்கெட் எடுக்கும் பவுலரை அடையாளம் காண வேண்டும், அதே போல் ரன்களைக் கட்டுப்படுத்தும் பவுலரும் தேவை.

    எனவே இதுதான் டெம்ப்ளேட். விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் குறிக்கோள்.

    இவ்வாறு கூறினார் விராட் கோலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், புஜாரா, ரகானே, தனது பேட்டிங்கை கொஞ்சம் அதிமதிப்பீடு செய்கிறார் கோலி, 2 ஆண்டுகளாக ஒன்றும் ஆடவில்லை என்பதுதான் உண்மை. பேட்டிங் பலவீனத்தை மூடி மறைக்கிறார் கோலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: