• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி நன்றாகத்தான் ஆடி வருகிறார்: கோச் சீரியஸான தமாஷ்

விராட் கோலி நன்றாகத்தான் ஆடி வருகிறார்: கோச் சீரியஸான தமாஷ்

கோலி.

கோலி.

மொத்தமே 124 ரன்கள். சராசரி 24.8 என்று பரிதாபமாக ஆடி வரும் கோலியைப் பார்த்து நீ நல்லாத்தான் ஆடுற என்று யாராவது சொன்னால் கோலி என்ன நினைப்பார், ‘இந்த ஆள் வேற தமாஷ் பண்ணிக்கிட்டு’ என்றுதானே நினைப்பார். ராஜ்குமார் சர்மாவின் கருத்தும் இந்த வகையறாவைச் சேர்ந்ததே.

  • Share this:
ஜாம்பவான் பேட்ஸ்மென் ஜீனியஸ் சச்சின் டெண்டுல்கரும் முன்னாள் மிகப்பெரிய பேட்ஸ்மெனுமான சுனில் கவாஸ்கர் முதல் லீக் ஆடும் சாதாரண பிளேயர், பத்திரிகை நிருபர் உட்ப அனைவரும் விராட் கோலியின் சொதப்பலான டெக்னிக்கை விமர்சித்து வரும் நிலையில் அவரது சிறுபிராய பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே விராட் கோலி நன்றாக ஆடிவருகிறார் என்று கூறினால் அது தமாஷ் இல்லாமல் வேறு என்னவாம்.

ஆனால் ராஜ்குமார் ஷர்மா இதை சீரியசாகவே சொல்கிறார். கோலியின் கால் எங்கோ இருக்கிறது, மட்டை எங்கோ இருக்கிறது மனசு எங்கோ இருக்கிறது என்று அனைவரும் தாக்கி வரும்போது இவர் மட்டும் எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா?

இவர் கூறுவது என்னவெனில் இங்கிலாந்து தொடர்ந்து அவருக்கு சீரான முறையில் நல்ல இடங்களில் பந்தை பிட்ச் செய்து ஸ்விங் செய்கின்றனர், தளர்வான பந்துகளை கோலிக்கு அளிப்பதில்லை என்று கூறுகிறார், இது சரியானதுதான் ஆனால் மற்றபடி விராட் கோலி நன்றாக ஆடுகிறார் என்று கூறுவது சீரியசாக இந்தக் கோச்சுக்கு ஏதோ ஞாபக மறதி பிரச்னை இருப்பது போலவே நம்மை ஐயத்துக்கு உள்ளாக்குகிறது.

மொத்தமே 124 ரன்கள். சராசரி 24.8 என்று பரிதாபமாக ஆடி வரும் கோலியைப் பார்த்து நீ நல்லாத்தான் ஆடுற என்று யாராவது சொன்னால் கோலி என்ன நினைப்பார், ‘இந்த ஆள் வேற தமாஷ் பண்ணிக்கிட்டு’ என்றுதானே நினைப்பார். ராஜ்குமார் சர்மாவின் கருத்தும் இதையொத்ததே.



ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு ராஜ்குமார் சர்மா கூறும்போது, “இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே கோலி நன்றாக ஆடிவருவதாகவே நான் உணர்கிறேன். எல்லா பேட்ஸ்மென்களும் அவுட் ஆவது சகஜமே!! (அடேங்கப்பா!), இங்கிலாந்து கோலிக்கு சரியான இடத்தில் வீசுகின்றனர். அவருக்கு ரன்கள் எடுக்கும் பந்துகளை வீசுவதில்லை.

இங்கிலாந்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பேட்ஸ்மென் அவுட் ஆவார். மேகமூட்டமாக இருந்தால் பந்துகள் ஸ்விங் ஆகும். எனவே கவனம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் வீடியோ ஃபுட்டேஜ் கிடைக்கிறது இதை வைத்து எந்த பேட்ஸ்மெனாக இருந்தாலும் சரியாக அவரை பிடித்து விடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை துரத்துவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்டர்சன் எவ்வளவு பெரிய பவுலர், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அவரால் வீச முடியும். ஷார்ட் பிட்ச் போடமாட்டார். ட்ரைவ் லெந்தும் வீச மாட்டார், கிரேட் பவுலர்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: