பேக் ஃபுட்டில் ஆடத் தெரியாதா?- கேள்விக்கு அடக்கி வாசித்த விராட் கோலி

கோலி

பொதுவாக உக்கிரமாகவே இருப்பார் கேப்டன் விராட் கோலி, அதுவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கிரிக்கெட் தெரிந்த பத்திரிகையாளர் டெக்னிக்கலாக கேள்வி கேட்டால் இன்னும் உக்கிரமடைவார் கோலி, ஆனால் லீட்ஸ் இன்னிங்ஸ்தோல்விக்குப் பிறகு அடக்கி வாசித்தார்.

 • Share this:
  பொதுவாக உக்கிரமாகவே இருப்பார் கேப்டன் விராட் கோலி, அதுவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கிரிக்கெட் தெரிந்த பத்திரிகையாளர் டெக்னிக்கலாக கேள்வி கேட்டால் இன்னும் உக்கிரமடைவார் கோலி, ஆனால் லீட்ஸ் இன்னிங்ஸ்தோல்விக்குப் பிறகு அடக்கி வாசித்தார்.

  உண்மையில் அவர் கோபப்படக்கூடாது, ஒரு கேப்டனாக பொறுமை அவசியம், ஆனால் அவர் பொறுமை காத்தாலும் ‘என்ன ஒரு சுயக் கட்டுப்பாடு’ என்று விதந்தோதும் புது ரசிகர்பட்டாளமே இங்கு பெருகி வருகிறது. அதாவது பொது இடத்தில் பொறுமை காப்பதுதான் இந்தியாவின் கேப்டனாக அவருக்கு நல்லது, ஆனால் அதையே ஏதோ அவர் விருப்பப்பட்டு செய்தது போல் ரசிக்கும் உள்ளங்கள் இப்போது ஏராளம்.

  இந்நிலையில் லீட்ஸ் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் ஒருவர் விராட் கோலியிடம், இங்கிலாந்து பவுலர்கள் ஃபுல் லெந்த்திலும் கால்களுக்கும் வீசுகின்றனர் அவர்கள் எப்போதாவது ஷார்ட் பிட்ச் வீசும் போது பின் காலில் சென்று ஆடும் வாய்ப்பை இழக்கிறோமே, இதனால் ரன்கள் எடுக்கும் வாய்ப்பை பறிகொடுக்கிறோமே என்ற தொனியில் கேள்வி கேட்க விராட் கோலி அமைதியாக ஓகே, தேங்க்ஸ் என்று அதற்கு அமைதியாக பதில் அளித்தார்.

  ஆனால் அந்த நிருபர் கேட்ட கேள்வி சரியாக அமையவில்லை. அவர் என்ன கேட்டிருக்க வேண்டுமெனில், ஏன் ஸ்விங் பந்துகளுக்கு உடலிலிருந்து விலகி மட்டையைக் கொண்டு செல்வதோடு முன் காலில் வந்து ஏன் ஆட வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும்.

  இந்திய வீரர்களால் ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கரையும் இன்ஸ்விங்கரையும் கணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பழைய பிரச்சனைதான் ஆனால் அதற்கு தீர்வு காண வேண்டும், ரோகித் சர்மா சரியாகக் கணித்து ஆடுகிறார். பேட்டிங் கோச் என்ன செய்கிறார்? ரவிசாஸ்திரி என்ன செய்கிறார்? பவுலிங் கோச் பாரத் அருண், பவுலிங்கில் பிரச்சனை இருந்தால் உடனே அதற்கு தீர்வு கண்டு பவுலிங் யூனிட் பிரமாதமாகச் செயல்படுகிறது, ஆனால் ரகானே, புஜாரா, கோலி தடுமாறுகின்றனர், அவர்களை பேட்டிங் கோச்சினாலும் ரவி சாஸ்திரியினாலும் சரி செய்ய முடியவில்லை.  பந்து வந்தவுடன் சற்றே தாமதமாக ஆட வேண்டும், இங்கிலாந்தில் மார்க் வாஹ் ஆடிய விதம் பற்றி வீடியோ பதிவுகள் இருந்தால் அதைப் போட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.

  ரோகித் சர்மா மார்க் வாஹ் ஆடுவது போல் ஆடுவதாக ஷேன் வார்ன் வர்ணனையில் தெரிவித்தார். இது மிகவும் முக்கியமான விஷயம். பின்னால் சென்று ஆடினால் எல்.பி. ஆகி விடுவோம் என்ற பயத்தினால் பின்னால் சென்று ஆட கோலி, புஜாரா, ரகானே அஞ்சுகின்றனர், புஜாரா இந்தப் பிட்சில் அடித்த 91 ரன்கள் அவருக்கு நம்பிக்கை கூட்டும் ஆனால் பந்துகள் ஸ்விங் ஆகும் பிட்ச்களில் அவர் இன்னமும் பலவீனமானவர்தான்.

  எனவே உடலிலிருந்து விலகி மட்டையை கொண்டு பந்தின் முன்னால் நீட்டும் அடிப்படைத் தவறிலிருந்து வெளியே வந்தால்தான் இந்திய பேட்ஸ்மென்கள் உருப்பட முடியும். இதைத்தான் அந்த நிருபர் கேட்கும் போது சரியாகக் கேட்காமல் அரைகுறையாகக் கேட்டு விட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: