போன வேகத்தில் திரும்பி கோலி செய்த சாதனை.. தோனியை மிஞ்சிய கேப்டன்

விராட் கோலி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேவையற்ற சாதனைக்கு ஆளாகி உள்ளார்.

 • Share this:
  நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களை திணறடித்து விக்கெட்களை கைப்பற்றினர். பும்ரா மீண்டும் ஃபார்முக்கு திரும்பி 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஷமி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

  இதனால் இங்கிலாந்து முதல் இன்னங்சில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் ரூட் மட்டும் நிதானமாக விளையாடி 64 ரன்கள் குவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

  முதல் இன்னிங்சில் 21 ரன்களுடன், இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில், 36 ரன்கள் எடுத்திருந்த போது ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் இறங்கிய புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ரஹானே 5 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். 46.4வது ஓவரில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பந்த் 7 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தை விட இந்திய அணி 58 ரன்கள் பின்தங்கியுள்ளது.

  Also Read : இந்தியா-இங்கிலாந்து - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் வீரர்கள்

  இந்த போட்டியில் விராட் கோலி டக் அவுட்டாகி தேவையற்ற சாதனைக்கு ஆளாகி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை (9) டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி செய்துள்ளார். இதற்கு முன் தோனி அதிகபட்சமாக 8 முறை டக் அவுட்டாகி இருந்தார்.

  அதிக டக் அவுட்டான இந்திய கேப்டன்கள்

  விராட் கோலி- 9 (101 இன்னிங்ஸ்)
  மகேந்திர சிங் தோனி - 8 (96 இன்னிங்ஸ்)
  எம்.கே.பட்டோடி - 7 (73 இன்னிங்ஸ்)
  கபில் தேவ் - 6 (48 இன்னிங்ஸ்)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: