• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால்...- சச்சின் ஸ்னேகிதன் வினோத் காம்ப்ளி  'கமெண்ட்'

நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால்...- சச்சின் ஸ்னேகிதன் வினோத் காம்ப்ளி  'கமெண்ட்'

வினோத் காம்ப்ளி

வினோத் காம்ப்ளி

நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் என்ன செய்வேன் என்று தோல்வியுறும் கேப்டன் கோலிக்கு முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி அட்வைஸ் செய்துள்ளார்.

 • Share this:
  விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக அவராக வடிவம் பெறவில்லை, மாறாக அவர் கேப்டனாக உருவாக்கப்பட்டார். 2014-ல் ஆஸ்திரேலியா தொடரில் திடீரென தோனி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு அறிவிக்க கோலி அவசரத்துக்குக் கேப்டனாக்கப்பட்டு பிறகு அவரே நிரந்தரமானார்.

  இவரை ஒரு பெரிய கேப்டன் என்று உருவாக்க ஆரம்பக்காலங்களில் உள்நாட்டிலேயே ஏகப்பட்ட தொடர்கள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டது, ஐசிசி டூர் நிர்ணய கமிட்டியும் இதற்கு ஒத்துழைத்தது. உள்நாட்டில் சொத்தைப் பிட்ச்களில் சொத்தை அணிகளை வென்று பெரிய கேப்டன் என்பது போல் கோலி காட்டப்பட்டார், அவ்வாறு ஊடகங்களும் அவரைப்பற்றி ஊதிப்பெருக்கின.

  விராட் கோலி


  இன்று ஒரு கேப்டனாக அவர் முற்றிலும் எக்ஸ்போஸ் ஆகியுள்ளார். அணி தோற்கும் போது அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அணித்தேர்வுகளில் ஏகப்பட்ட குளறுபடிகளை நிகழ்த்துகிறார். பேட்டிங் என்ற ஒரேகாரணத்துக்காக ஜடேஜாவை அணியில் வைத்திருக்கிறார், அஸ்வினை ஒழிக்கிறார், குல்தீப் யாதவ் என்ற ஒரு அபூர்வமான ஸ்பின்னரின் ஒருநாள், டெஸ்ட் கரியரை காலி செய்தது கோலிதான் என்றால் மிகையாகாது, இதே போல் புவனேஷ்வர் குமாரை ஒழித்தார். புஜாராவை லேசாக ஒழிக்கப் பார்த்தார், ஆனால் 2018 ஆஸ்திரேலியா தொடரில் அவர் 3 சதங்களை அடித்ததும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

  அஸ்வின் லார்ட்ஸில் 2 இன்னிங்ஸ்களில் 62 ரன்கள் எடுத்துள்ளார் சராசரியும் 62, கோலியின் லார்ட்ஸ் சராசரி 21.40.


  இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் முச்சதம் எடுத்த கருண் நாயரை சுத்தமாக ஒழித்து விட்டார், கருண் நாயருக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று கூட கூறலாம்.

  வேகப்பந்துக்கு சாதகமான ஆட்டக்களங்களிலும் குல்தீப் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்கள் நன்றாக வீசுவார்கள், பிறகு இங்கிலாந்துக்கு எப்போதுமே புதிர் ஸ்பின்னர்கள் என்றால் அலர்ஜிதான், ஆனால் ஜடேஜா என்ற ஒருவரை அணியில் எந்தக் காரணத்துக்காக வைத்திருக்கிறார் என்பது கோலிக்கே வெளிச்சம்.  இத்தனை கோளாறுகளையும் தனது பேட்டிங் திறமைகளினால் வாயடைக்கச் செய்த கோலி இப்போது அதிலும் சோடைப் போகத் தொடங்கியுள்ளதால் அவரது கேப்டன்சி ஓட்டைகளும் வெளி வரத்தொடங்கியுள்ளன.

  ஹெடிங்லீயில் ஈரப்பதம் இருந்த முதல் நாள் பிட்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை எடுத்து மேட்சைக் கோட்டை விட்டார். புதிய பந்தில் இந்திய வீரர்களுக்கு ஆட வரவில்லை என்ற பிரச்னையை ஒரு கேப்டனாக அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. ஏதோ பும்ரா, ஷமி,  சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களினால் வெளிநாடுகளிலும், இந்தியாவில் ஸ்பின் ஆதரவு குழிப்பிட்சும் இவருக்கு கைகொடுத்து வருகின்றன.

  இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் ஸ்னேகிதரும் 50 ரன்கள் சராசரி வைத்திருந்தும் இந்திய அணியிலிருந்து அநியாயமாக ஒழிக்கப்பட்டவருமான வினோத் காம்ப்ளி தன் ட்விட்டர் பக்கத்தில், “அஜிங்கிய ரகானேவுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். சூரியகுமார் யாதவ்வை கொண்டு வர வேண்டும். 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லாமல் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் அஸ்வினை அணிக்குக் கொண்டு வரவேண்டும்.

  நான் கேப்டனாக இருந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் குறித்து ஒவ்வொரு வீரரிடமும் தனிப்பட்ட முறையில் பேசுவேன். அவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது நெட்டிசன்களுக்குப் பிடிக்கவில்லை, கோலியை குறைகூறலாமா, இவரையும் பிடித்து வாங்கி விட்டனர். ரசிகர்களின் கிரிக்கெட் மதிப்பீடுகள் வீழ்ச்சி கண்ட காலமாகும் இது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: