பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, அகர்வால், புஜாரா அவுட்- விராட் கோலி இல்லை; எதிரணியில் ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர்

ரோகித் சர்மா

இந்திய அணியில் கோலி இல்லை. எதிரணியான கவுண்டி செலக்ட் அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் ஆடுகின்றனர்.

 • Share this:
  இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக சென்றுள்ள விராட் கோலி தலைமை இந்திய அணி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆடி வருகிறது.

  இந்திய அணியில் கோலி இல்லை. எதிரணியான கவுண்டி செலக்ட் அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் ஆடுகின்றனர்.

  இந்த ஆட்டம் இன்று தொடங்கி முதலில் இந்திய அணி பேட் செய்து வருகிறது, ஆனால் இந்திய அணி தட்டுத் தடுமாறி ஆடி வருகிறது, சற்று முன் வரை 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 70 ரன்கள் எடுத்துள்ளது.

  Also Read: India vs Sri Lanka | 2-வது ஒருநாள்: ஹாட்ரிக் வாய்ப்பை தவற விட்ட செகல் (வீடியோ)

  ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால் தொடக்கத்தில் இறங்கினர். இருவரும் 10 ஓவர்களில் 33 ரன்களை சேர்த்திருந்த நிலையில் 33 பந்துகள் ஆடி 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா 22 வயது வேகப்பந்து வீச்சாளர் லிண்டன் ஜேம்ஸ் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  35 பந்துகளில் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டிய மாயங்க் அகர்வால் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்த நிலையில் இதே லிண்டன் ஜேம்ஸ் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

  இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் செடேஸ்வர் புஜாரா 47 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஜாக் கார்சன் என்ற 20 வயது ஆஃப் ஸ்பின்னரிடம் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.

  தற்போது ஹனுமா விகாஇ 12 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், கவுண்டி செலக்ட் லெவன் தரப்பில் லிண்டன் ஜேம்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: