நாட்டிங்கம்மில் நேற்று தொடங்கிய இந்திய-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி அணியில் ஜடேஜா இருக்கிறார், ஆனால் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார், இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது போன்ற நீக்கங்களுக்கு விராட் கோலி பெயர் பெற்றவர், புஜாராவை இலங்கையில் ட்ராப் செய்தார் பிறகு இங்கிலாந்தில் 2018-ல் ட்ராப் செய்தார். தென் ஆப்பிரிக்கா தொடரில் புவனேஷ்வர் குமார் முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் , 40+ ரன்கள் என்று அவர் மட்டுமே பிரமாதமாக ஆட அடுத்த டெஸ்ட் போட்டியில் செஞ்சூரியனில் புவனேஷ்வர் குமாரை காணோம்.
அஸ்வினை ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலிருந்து திறம்பட ஓரங்கட்டினார் விராட் கோலி. எப்படி கிரெக் சாப்பல் தினேஷ் கார்த்திக் ஒரு கேப்டன்சிக்கான வீரர் என்று கண்டுப்பிடித்தப் போது தோனியை கேப்டனாக்கி அவரை ஓரங்கட்டினார்களோ அதே போல் விராட் கோலி தனக்கு அடுத்த இடத்தில் யாராவது வந்தால் அவர்களை இப்படி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதைக் காட்ட முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த போது ஒரு டெஸ்ட்டில் ரகானே இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றதையடுத்து ரகானேவை ஓரங்கட்டினார். இப்படியாக கோலியின் திருவிளையாடல் போய்க்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: Ind vs Eng | முதல் டெஸ்ட் போட்டி: 4 டக் அவுட்.. 183 ரன்களில் சுருட்டி இங்கிலாந்தை திணறடித்த இந்திய அணி!
ரகானே கேப்டன்சி செய்த அந்த டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் தன் அறிமுக டெஸ்ட்டிலேயே அசத்தலாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் விராட் கோலி கேப்டன்சியில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து குல்தீப் யாதவும் ஓரங்கட்டப்பட்டார். அதே போல் அஸ்வினிடம் கேப்டன்சி திறமைகள் இருப்பதை பலரும் அங்கீகரித்த பிறகுதான் அவரை ஒருநாள், டி20யிலிருந்து முற்றிலும் கழற்றி விட்டனர். இப்போது முத்தாய்ப்பாக டெஸ்ட் போட்டியிலும் அவரை உட்கார வைக்கத் துணிவு கொண்டார்.
ஜடேஜா எடுக்கும் 20-30 ரன்களை அஸ்வின் எடுக்க மாட்டாரா என்ன? மேலும் சமீபத்தில்தான் கெண்ட் அணிக்காக இங்கிலாந்து பிட்சில் 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சோமர்செட் அணியை 69 ரன்களுக்குச் சுருட்டினார். ஆனால் முதல் டெஸ்ட்டில் இல்லை.
இது தொடர்பாக பலரும் தங்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்:
மைக்கேல் வான்: Wow … No @ashwinravi99 !!!! #ENGvIND என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் எடிட்டர் சம்பித் பால்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேகமூட்டமான வானிலையில் கிரீன் டாப் பிட்சில் அஸ்வின், ஜடேஜா இருவரும் இருந்தனர். ஆனால் இங்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்து ஸ்பின்னரை உட்கார வைத்துள்ளனர்.
வாசிம் ஜாஃபர் - நோ அஸ்வின்? என்று ஆச்சரியம் காட்டியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்னும் நிறைய நெட்டிசன்கள், வாசகர்கள் அஸ்வின் இல்லாதது குறித்து அதிர்ச்சி வெளியிட்டு பதிவிட்டுள்ளனர்.
முதல் நாள் ஆட்டத்தில் 183 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா 21/0 என்று உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.