ஓவல் டெஸ்ட் போட்டியில் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதிவேக அரைசத சாதனையை இங்கிலாந்தில் நிகழ்த்திய ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்து லெஜண்ட் இயன் போத்தமுடன் என்னை ஒப்பிட்டு அணி வீரர்கள் தன்னை ‘டீஸ்’ செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த ஷர்துல் தாக்கூர் போத்தம் 32 பந்துகளில் எடுத்த அதிவேக அரைசத சாதனையை முறியடித்தார். மேலும் கபில்தேவின் 30 பந்து அரைசத சாதனையை ஒரு பந்தில் சமன் செய்ய தவறினார் ஷர்துல். இவர் ஆடிய எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸினால் இந்தியா 191 ரன்களை எட்டியது.
தன்னுடைய இன்னிங்ஸ் பற்றி ‘பாசிட்டிவ்’ ஆக கருத்துக் கூறிய ஷர்துல் தாக்கூர், “இயன் போத்தம் சாதனை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அணிக்காக முக்கியமான ரன்களை எடுப்பது நல்லது. ஆம் இவர்கள் என்னை போத்தமின் பெயரான பீஃபி என்று அழைத்து டீஸ் செய்கின்றனர். ஆட்டத்தின் கிரேட்களுடன் ஒப்பிடுவது நல்லதுதான்.
ரிஷப் பந்த் அவுட் ஆன பிறகு இப்படி ஒரு இன்னிங்சை ஆடுவது தேவைப்பட்டது, இரு வழிமுறைகள்தான் உள்ளன, ஒன்று நாம் பொறுமையாக இருந்து எதிர்முனை வீரர் ரன்கள் எடுக்க ஸ்டாண்ட் கொடுக்க வேண்டும். அல்லது நேரடியாக அடித்து ஆட வேண்டும், இந்த 2 முறைதான் உண்டு.
அணிக்கு தேவை ரன்கள்தான். சரியான வழியில் எடுக்கப்படும் ரன்கள் என்ற கருத்தாக்கமெல்லாம் இல்லை, எப்படி வந்தால் என்ன ரன்கள் ரன்கள்தான். எனக்கு சரியாக எல்லாம் மாட்டியது. எனவே ரன்கள் எடுப்பதுதான் சிறந்தது, அடித்து ஆடுவதுதான் சரி என்று முடிவெடுத்தேன்.
நிச்சயமாக ஒரு கட்டத்தில் 150, 170 என்று தான் நினைத்தோம் ஆனால் 191 என்ற ஸ்கோர் நிச்சயம் ஒரு மாற்றத்தை விளைவிக்கும். இந்த டெஸ்ட்டில் நமக்கு வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த பிட்ச் பேட்ஸ்மென், பவுலர்கள் இருவருக்குமே சாதகமாக உள்ளது. சரியான இடத்தில் வீசினால் பிட்ச் உதவி புரிகிறது. அதே வேளையில் தவறு செய்ய சிறு வாய்ப்பிருந்தாலும் பேட்ஸ்மென்களுக்கு அது ரன் ஸ்கோர் வாய்ப்பாகும்” என்கிறார் ஷர்துல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Shardul thakur