ஆண்டர்சன் பிரச்னை: டீல் செய்ததில் யார் பெட்டர் கேப்டன்?- தோனியா கோலியா?- ஒரு பார்வை

தோனி-ஆண்டர்சன்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இந்திய அணிக்கும் தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதில் தூண்டுபவர் ஜேம்ஸ் ஆண்டர்சனாகவே இருந்துள்ளார்.

 • Share this:
  ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு எதிராகத்தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இருமுறை தொடர் நாயகன் விருதுகளை இங்கிலாந்தில் தட்டிச் சென்றுள்ளார். ஒரு முறை இந்தியாவில் 2012-ல் இங்கிலாந்து தொடரை வென்ற போது நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

  2012-ல் இங்கிலாந்து இந்திய அணியை 2-1 என்று வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது இரு அணிகளுக்குமான வித்தியாசம் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்று தோனியே அவரைப் பாராட்டியுள்ளார்.

  இந்த சாதனைகளுடன் தன் வாயால் இந்திய அணியை பலமுறை வசைபாடியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன், அது 2021 லார்ட்ஸ் டெஸ்ட்டில் முத்தாய்ப்பாக முடிந்தது. இந்திய வெற்றி அவர் வாயை அடைத்துள்ளது.

  2014-ல் ட்ரெண்ட் பிரிட்ஜில் ஜடேஜாவை தள்ளி விட்ட ஆண்டர்சன் - கடுப்பான கேப்டன் தோனி:

  2014 இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நடத்தையினால் இரு அணிகளுக்கும் இடையே இருந்து வந்த ஒரு ஜெண்டில்மென் உறவு முறிந்தது. இரு அணியும் ஓய்வறை நோக்கி செல்லும் போது இடையில் இருந்த தாழ்வாரத்தில் ஆண்டர்சனுக்கும் ஜடேஜாவுக்கும் ஏதோ வாக்குவாதம் முற்ற ஆண்டர்சன் கடும் கெட்ட வார்த்தைகளால் ஜடேஜாவைத் திட்டி அவரை தள்ளியும் விட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.  இந்திய அணி நிர்வாகம் ஐசிசியிடம் புகார் அளித்தது, ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது லெவல் 3 நடத்தைக் குற்றச்சாட்டு பதிவானது. அவரை உண்மையில் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.

  ஆனால் இங்கிலாந்து அணி நிர்வாகம் தவறை ஜடேஜா மீது திருப்பி விட்டு ஜடேஜாதான் ஆக்ரோஷமடைந்து ஆண்டர்சனை நோக்கி வந்தார், தற்காப்புக்காகவே ஆண்டர்சன் ஜடேஜாவை தள்ளி விட்டார் என்று எதிர்ப்புகார் அளித்தது.

  இது இரு அணிகளுக்கும் இடையே பிளவை அதிகரிக்க, இந்தியா ஆண்டர்சன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதி உறுதியாக இருந்தது. இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ்டர் குக், அப்போது தன் அணியின் சிறந்த பவுலரான ஆண்டர்சனை நிலைகுலையச் செய்ய வேண்டி இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று குற்றம்சாட்டினார். அவரை நீக்கம் செய்ய இந்தியா சீப் உத்தியைக் கையாள்கிறது என்றார்.

  சம்பவம் குறித்த வீடியோ ஆதாரங்கள் இல்லாமலேயே ஜடேஜா மீது குற்றம்சாட்டப்பட்டு அவரது ஆட்டச் சம்பளத்திலிருந்து 50% அபராதம் விதித்தனர். தோனி இது குறித்து தன் கண்டனங்களை இப்படி பதிவு செய்தார்:  “இந்த விஷயம் திரும்பத் திரும்ப நிகழ்கிறது. ஒவ்வொரு முறையும் இந்திய அணிதான் வாங்கிக் கட்டிக் கொள்கிறது, எதிரணி வீரர் தூண்டி விடுகிறார், பதிலடி கொடுக்கும்போது நமக்கு அபராதம் விழுகிறது, ஜடேஜா எதுவும் செய்யாமல் இருந்தது அவரது நன்னடைத்துக்கு உதாரணம். இல்லையெனில் இது பெரிய விவகாரமாகியிருக்கும்” என்றார் தோனி.

  இதோடு ஆண்டர்சன் இந்த விவகாரத்தில் விடுவிக்கப்பட்டார், இது இந்திய அணிக்கு பெரிய ஷாக். தோனியே இந்தச் சம்பவத்துக்கு சாட்சியாக இருந்தார், ஆண்டர்சன் டஹன் ஜடேஜாவை வசைமாரி பொழிந்து தள்ளி விட்டார் என்பதை தான் பார்த்ததாக தோனி கூறினார். ஆனால் இந்தியா மேல்முறையீடு செய்து ஜடேஜாவுக்கான தண்டனையை நீக்கச் செய்தது.

  மும்பை, 2016: கோலி கேப்டன்

  2014-ல் கோலியை ஆண்டர்சன் 4 முறை வீழ்த்தினார். 2016-ல் இங்கிலாந்து இங்கு வந்த போது கோலி கேப்டனாகி விட்டார். இந்தத் தொடரில் ஆண்டர்சனை கோலி டம்மியாக்கி விட்டார், விசாகப்பட்டிணத்தில் ஒரு சதம், அரைசதம் மொகாலியில் மீண்டும் ஒரு அரைசதம், பிறகு மும்பையில் இரட்டைச் சதம் விளாசினார் கோலி. இங்கிலாந்து 0-3 உதை வாங்கும் தருணம். கோலியை ஆண்டர்சன் வீழ்த்த முடியவில்லை.

  கோலி அவுட் ஆன ஆண்டர்சன் பந்து.


  அப்போது ஆண்டர்சனிடம் கோலி பற்றி கேட்ட போது, கோலி ஒரு சிறந்த வீரர், ஆனால் இந்திய பிட்ச்கள் அவரது பேட்டிங் தவறுகளை மறைத்து விடுகிறது என்றார், இது சரியான கருத்துதான். மும்பையில் அஸ்வின் அப்போது எங்கள் கேப்டன் பற்றி பேசாதே என்று ஆண்டர்சனிடம் கூற வந்த போது கோலி தடுத்தார்.

  இந்தப் பின்னணியில்தான் ஆண்டர்சனுக்கு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பவுன்சர் மழை பொழிந்தார் பும்ரா, அது 10 பந்துகள் வீசப்பட்ட ஓவர், வேண்டுமென்றே நோ-பால் வீசியாவது அவரைக் காயப்படுத்த முயன்றார், கடைசியில் அவர் பவுல்டு ஆனார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆட்டம் முடிந்த பிறகு ஆண்டர்சனிடம் மன்னிப்புக் கேட்கச் சென்றார் பும்ரா, ஆனால் ஆண்டர்சன் அலட்சியப்படுத்தினார், மறுநாள் இந்திய வீரர்களுக்கு பவுன்சர் மழை பொழிந்தது இங்கிலாந்து ஆனால் இங்கிலாந்தை ஷமி, பும்ரா பேட்டிங்கும் பிறகு பவுலிங்கும் கோமாளிகளாக்கியது. வித்தியாசம் என்னவெனில் தோனி கூலாகக் கையாண்டார், ஆனால் தொடரை இழந்தார், இப்போது கோலி ஆக்ரோஷமாகக் கையாண்டார், டெஸ்ட் போட்டியை வென்றார்.
  Published by:Muthukumar
  First published: