HOME»NEWS»SPORTS»cricket india vs england test fans not allowed at chennai chepauk cricket stadium vjr

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி.. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி.. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்
  • Share this:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டி, 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்ப்பட்டுள்ளது. முதல் மற்றும் இராண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மைதானத்தில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.



இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி இல்லையென்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேக தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்திய கிரிக்கெட் வாரியம் 50 சதவீத பார்வையாளர்களுடன் டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கும் தமிழக அரசும் அனுமதி அளித்திருந்தது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தற்போது போட்டியை ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளது“ என்று கூறியுள்ளார்.
Published by:Vijay R
First published: