அடுத்து என்ன பிட்ச்? விவசாய நிலமா?- ரூட், கோலி பயிர் செய்ய வேண்டியதுதான்: ஜிம்பாப்வே வீரர் செம கிண்டல்

அடுத்து என்ன பிட்ச்? விவசாய நிலமா?- ரூட், கோலி பயிர் செய்ய வேண்டியதுதான்: ஜிம்பாப்வே வீரர் செம கிண்டல்

தைபு கிண்டல் ட்வீட்.

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 842 பந்துகள் வீசப்பட்டு அதில் 30 விக்கெட்டுகள் காலியாகியுள்ளன. 1935க்குப் பிறகு ஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட் போட்டி இதுவாகவே இருக்கும்.

  • Share this:
இந்தியப் பிட்ச்கள் குறித்து ஜிம்பாப்வே முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டன் ததேந்தா தைபு செம கிண்டல் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியின் குழிபிட்ச்கள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. 5 நாள் டெஸ்ட் 2 நாட்களில் முடிகிறது. அஸ்வின், அக்சர் படேல் ஆரஞ்சு, சாத்துக்குடியை வீசியே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தி விடுவார்கள் போலிருக்கிறது.

பிங்க் பந்து டெஸ்ட், பகலிரவு ஆட்டம் என்பதன் அழகே இரவு ஆகும் போது பந்துகள் ஸ்விங் ஆவதும் பகலில் கொஞ்சம் ஸ்பின் எடுப்பதும்தான், ஆனால் வெளியில் ஒரு விக்கெட் கூட எடுக்க வாய்ப்பில்லாத நேர் நேர் தேமா பவுலர் அக்சர் படேல் 11 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்றால் சிறு குழந்தையும் இந்தப் பிட்ச்களில் ஸ்பின் செய்யும் என்றுதான் கூற முடியும்.

இந்த வெற்றியை ஈட்டி விட்டு உரத்த குரலில் கொண்டாட்டம் வேறு என்ன வேண்டிக்கிடக்கிறது என்று தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்ததோடு, ஆஸ்திரேலியாவில் ரகானே தலைமையில் பெற்ற மதிப்பு மிக்க வரலாற்று வெற்றிகளை இழிவு படுத்துமாறு அதை மறக்கடிக்குமாறு விராட் கோலி இப்படிப் பிட்சை போட்டு வெல்கிறார். அவருக்கு அஸ்வின், ரோகித் சர்மா, ரகானே என்று அனைவரும் முட்டுக் கொடுக்கின்றனர். கோலி இன்னும் கொஞ்ச காலம் கேப்டனாக இருந்தால் இந்திய பேட்டிங் வேகப்பந்து வீச்சு அனைத்தையும் அழித்து விட்டுத்தான் செல்வார் என்பது திண்ணம்.பிசிசிஐ பணபலம் மிக்கது என்பதால் மற்றவர்களும் அஞ்சுகின்றனர். ஆனால் இனி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டால் ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே ஆடுவோம் என்றோ அல்லது அப்படி 4 டெஸ்ட் ஆடவேண்டும் என்றால் பி-டீமைத்தான் அனுப்புவோம் என்றோ கூற வேண்டும், அப்போதுதான் இந்த பிட்ச் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 842 பந்துகள் வீசப்பட்டு அதில் 30 விக்கெட்டுகள் காலியாகியுள்ளன. 1935க்குப் பிறகு ஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட் போட்டி இதுவாகவே இருக்கும்.

இந்நிலையில் 4-வது டெஸ்ட் பிட்சின் லட்சணம் எப்படி இருக்கும் என்று கேட்கவே வேண்டாம், 2-1 வென்றாகி விட்டது, பேட்டிங் பிட்சை போட்டு இந்த முறை கோலி முச்சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 3 நாட்கள் பேட் செய்து 700-800 ரன்களை அடித்து இங்கிலாந்து கையில் கொடுப்பார்கள். இதுவும் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டன் ததேந்தா தைபூ செம கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

அதாவது அடுத்து என்ன விவசாய நிலமா என்பது போல் டிராக்டர் ஒன்று பின்னணியில் இருக்க விராட் கோலியும் ஜோ ரூட்டும் விவசாய நிலத்தை பிட்சை ஆய்வு செய்வது போல் ஆய்வு செய்வதாக ஒரு படத்தையும் வெளியிட்டு செம கிண்டல் செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

அதில் டிராக்டர் வயல்வெளியுடன் ஜோ ரூட், விராட் கோலி அமர்ந்து பிட்சைப் பார்ப்பது போல், “4வது டெஸ்ட் பிட்சை 2 கேப்டன்களும் பார்ப்பது போல் தெரிகிறது” என்று செம கிண்டல் செய்துள்ளார்.
Published by:Muthukumar
First published: