ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

'டாஸ் தோத்தாச்சு.. இந்தியா ஜெயிச்சிடும்..' இந்த மைதானத்துக்கு இப்படி ஒரு ராசி.. வரலாறு இதுதான்!

'டாஸ் தோத்தாச்சு.. இந்தியா ஜெயிச்சிடும்..' இந்த மைதானத்துக்கு இப்படி ஒரு ராசி.. வரலாறு இதுதான்!

இங்கிலாந்து அணி டாஸ் வெற்றி

இங்கிலாந்து அணி டாஸ் வெற்றி

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று மெல்போர்னில் நடைபெற்று வரும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும் என தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி தொற்றுள்ளதுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என தனது கருத்துக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணி அடிலெய்டில் 2வது அரையிறுதி போட்டியில் விளையாடி வருகிறது. இந்த மைதானத்தில் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 6 போட்டிகளில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளனர்.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி தோல்வியடையும் என்பது அடிலெய்ட் மைதானத்தின் வரலாறு.

    இதையும் படிங்க: INDvsENG Live Updates | டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

    ஆம் இதுவரை இந்த மைதானத்தில் 11 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று உள்ளது. இதில் 11 ஆட்டங்களிலும் டாஸ் வென்ற தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் டாஸ் வென்றுள்ளதால் இந்திய அணி டாஸை தோற்றுள்ளத்துள்ளதால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று மெல்போர்னில் நடைபெற்று வரும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும் என தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India Vs England, T20 World Cup