ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

மாதிரி படம்

மாதிரி படம்

35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக எதிர்கொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அடிலெய்டில் நடைபெற்று வரும் 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

    இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக எதிர்கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க:உலகக் கோப்பையில் 15 வருடங்களில் தோனி இல்லாத முதல் நாக் அவுட்டில் இந்திய அணி

    அடிலெய்ட்டில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யாமல் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பிடித்துள்ளனர்.

    ஆடும் லெவன் இந்திய அணி: கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

    ஆடும் லெவன் இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர்,அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்

    Published by:Arunkumar A
    First published:

    Tags: ICC, India captain Rohit Sharma, India Vs England, T20 World Cup