ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கோலியின் மற்றொரு கோட்டை இது; அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?

கோலியின் மற்றொரு கோட்டை இது; அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்திய அணி

இந்திய அணி

இந்தியா -இங்கிலாந்து அணிகள் இரண்டுமே பேட்டிங், பவுலிங்கில் வலுவாக உள்ளதால் போட்டியில் பரபரப்பு பஞ்சம் இருக்காது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலககோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள்  அடிலெய்டில் மோதவுள்ள நிலையில் மைதானத்தின் நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்போம்

  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை அடிலெய்ட்டில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் உள்ள குறுகிய சதுர பவுண்டரிகள் இருபுறமும் இருக்கும் என்பதால் பவர் ஹிட்டர்களை ஏதுவாக இருக்கும், இதனால் இந்த போட்டியில் பவுண்டரிக்கு பஞ்சம் இருக்காது. மேலும் அடிலெய்ட் ஓவல் மைதானம் எப்போழுதும் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியை விட இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும் அந்த அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு அது மிகவும் பலவீனமாக இருக்கும்

  இங்கிலாந்து அணியில் சாம் கரன், கிரிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ்  உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மார்க் வுட் டுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அடிலேய்ட் மைதானம் வேகப்பந்துக்கு ஏற்ற மைதானம் என்றாலும் இங்கிலாந்து அணியில் டி20யில் நல்ல அனுபவம் வாய்ந்த சுழல்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அடல் ராஷித், ஆல்ரவுண்டர் மொயின் அலி உள்ளிட்டோரும் இந்திய அணி பேட்ஸ்மேன்களுகு பெரிய சவலாக இருப்பார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

  இதையும் படிங்க:  பாபர், ரிஷ்வான் அபாரம்... நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

  இந்தியா அணிக்கு அடிலெய்ட் மைதானம் என்பது நமது சொந்த மைதானம் போல குறிப்பாக விராட் கோலி இந்த மைதானத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம். விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார்.

  இதில் கோலி 907 ரன்களை அடித்திருக்கிறார். இதில் சராசரி 75.88 ஆகும். இதில் 5 சதங்கள் கூட அடங்கும் மேலும் கடைசியாக சூப்பர் -12 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து அதனை நிரூபித்தும் இருக்கிறார்.

  இப்படி இருக்க இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டிய உள்ளிட்ட நான்கு வேகப்பந்து மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இந்திய அணிக்கு அது சாதகமாகவே பார்க்கப்படுகிறது. சுழல்பந்தை பொறுத்த வரை அஷ்வின் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

  இதையும் படிங்க:  இந்தியா -இங்கிலாந்து போட்டியில் மழை வருமா? முழு வானிலை ரிப்போர்ட் இதோ

  அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது அதாவது அக்‌ஷர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹொடா அல்லது கடந்த போட்டியில் விளையாடிய ரிஷப் பந்துக்கு பதிலாக மறுபடியும் தினேஷ் கார்த்திக் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடியுள்ளதால மீண்டும் அணிக்கு நீடிக்கவும் வாய்ப்புள்ளது.

  இங்கிலாந்து அணி பேட்டிங்கை பொறுத்த வரை பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணிக்கு சற்று சவலாகவே இருக்கும்.  மேலும் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் டேவிட் மலான் உடற்தகுதி இல்லாமல் இருப்பதால இந்திய அணிக்கு மேலும் பலமாக பார்க்கப்படுகிறது. இதுவரை 12 டி20 போட்டிகள் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதியுள்ளது.இதில் 12 போட்டிகளில் இந்தியாவும் 10ஆட்டங்களில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.

  டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரை இரு அணிகளும் மோதிய 3 முறை இங்கிலாந்தும் ஒரு முறையும் இந்தியா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இதுவரை 14 சர்வதேச டி20 போட்டிகள் அடிலெய்ட்டில் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. அதேபோல் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி அதிக வெற்றிகளை குவித்துள்ளதால் இந்த போட்டி இந்தியாவுக்கே சதகமாக மாறவே வாய்ப்புள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India Vs England, T20 World Cup