ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

INDvsENG: மேட்ச்ச இந்தியா ஜெயிக்கணும்னா டாஸ் தோற்கணும்.. இப்படி ஒரு வரலாறு இருக்கு!

INDvsENG: மேட்ச்ச இந்தியா ஜெயிக்கணும்னா டாஸ் தோற்கணும்.. இப்படி ஒரு வரலாறு இருக்கு!

கேப்டன் ரோகித் சர்மா

கேப்டன் ரோகித் சர்மா

இங்கிலாந்து அணியில் பட்லர் தொடங்கி கிரிஸ் வோக்ஸ் வரை பேட்டிங்கில் திறமை உடையவர்களாக இருக்கிறார்கள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் அடிலெய்ட் மைதானத்தில் முதலில் டாஸ் வென்ற அணி இதுவரை டி20 போட்டியில் வெற்றி பெறவில்லை என வினோத வரலாற்றை கொண்டுள்ளது.

    டி20 உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 6 போட்டிகளில் 4 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் இங்கிலாந்து போன்ற வலிமையான பேட்டிங்கை வைத்துள்ள அணிக்கு இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தால் அது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். இதனால் இந்திய அணி டாஸ் வெல்லாமல் தொற்பதே நல்ல முடிவாக இருக்கும்.

    அடிலெய்ட் மைதானத்தின் ஸ்கொயர் பவுண்டரியின் எல்லை குறைவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப இந்திய அணியின் திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதனை களத்தில் செயல்படுத்தினால் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும்.

    இதையும் படிங்க: INDvsENG Live Updates | டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

    இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி தோல்வியடையும் என்பது அடிலெய்ட் மைதானத்தின் வரலாறு. ஆம் இதுவரை இந்த மைதானத்தில் 11 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று உள்ளது. இதில் 11 ஆட்டங்களிலும் டாஸ் வென்ற தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றாலே போட்டியை வெற்றி பெற்றதை போல தான். எதற்கு கூறுகிறோம் என்றால் இங்கிலாந்து அணியில் பட்லர் தொடங்கி கிரிஸ் வோக்ஸ் வரை பேட்டிங்கில் திறமை உடையவர்களாக இருக்கிறார்கள் இதனால் இந்திய அணிக்கு சேசிங் கிடைத்தால் வெற்றி வாய்ப்பு நிறைந்திருக்கும்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India Vs England, T20 World Cup