தொடரை வென்று விடுமா இங்கிலாந்து?- கோலி கலக்கம்;- யார் தொடக்க வீரர்கள்? சொத்தை பவுலிங் மாறுமா?

தொடரை வென்று விடுமா இங்கிலாந்து?- கோலி கலக்கம்;- யார் தொடக்க வீரர்கள்? சொத்தை பவுலிங் மாறுமா?

விராட் கோலி

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 4வது டி20 போட்டியை இந்திய அணி வென்றே ஆக வேண்டும், இல்லையெனில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றி விடும், பிறகு 5வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெறவே சாத்தியமாகி விடும்.

  • Last Updated :
  • Share this:
அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 4வது டி20 போட்டியை இந்திய அணி வென்றே ஆக வேண்டும், இல்லையெனில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றி விடும், பிறகு 5வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெறவே சாத்தியமாகி விடும்.

இதனால் விராட் கோலி வயிற்றில் புளியைக் கரைக்கிறது, ஏனெனில் அணியை செட்டில் ஆக விடாமல் அபத்தமாக எதையாவது மாற்றம் செய்து கொண்டிருக்கிறார், களவியூகம், பந்து வீச்சு மாற்றத்தில் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கும் போக்கும் அவரிடம் அதிகரித்துள்ளது. அதனால் இன்றைய போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று அவர் கலக்கத்தில் இருக்கிறார்.

தொடக்க வீரர்கள் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது, முதல் 2 போட்டிகளுக்கு தேவையில்லாமல் ரோகித் சர்மாவை உட்கார வைத்தார் விராட் கோலி, ஏனெனில் இழந்த தனது பார்மை மீட்க ரோகித் சர்மா இல்லாவிட்டால்தான் சரிப்படும் என்று நினைத்தார். ஏனெனில் ரோகித் ஆடத் தொடங்கினால் விராட் கோலிக்கு அதிகரன்கள் எடுக்கும் வாய்ப்பு டி20களில் குறைகிறது. ரோகித் இல்லை பாருங்கள் இரண்டு அபார அரைசதங்களை அவரால் எடுக்க முடிந்தது.

இஷான் கிஷன்.


வேறு வழியில்லாமல் சூழலின் நெருக்கடியினால் ரோகித் சர்மாவை 3வது போட்டிக்கு இறக்கினார், ரோகித் விரைவில் ஆட்டமிழந்தது கோலிக்கு வாய்ப்பை அளித்தது. இந்நிலையில் மீண்டும் ரோகித்தை உட்கார வைப்பாரா? அல்லது தன் நட்பு வட்டார ராகுலுக்கே மீண்டும் 1,0, 0-வுக்கு பிறகு மற்றொரு வாய்ப்பை அளித்து, இஷான் கிஷனை மீண்டும் தொடக்க நிலைக்கு அனுப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது வீம்புக்குனே ஷிகர் தவானை இறக்கினாலும் இறக்கலாம். கோலி அணித்தேர்வு விவகாரத்தில் ஒரு ‘ஃப்ரீக்’ மன நிலைப்படைத்தவர், தோனி அளவுக்கு தெளிவு கிடையாது. தொடர்ந்து சொதப்பி வரும் சாஹலை ஏன் அவர் புரமோட் செய்கிறார் என்பதும் கேள்வியே.

தொடக்கம் சரியாக இல்லாததால் தோற்ற இரண்டு போட்டிகளிலும் பவர் ப்ளேயில் இந்திய அணி 24/2, 22/3 என்று ஆனது. இன்னொர் பரிசோதனை செய்யவேண்டும் என்றால் தொடக்கத்தில் இஷான் கிஷன், ரிஷப் பந்த்தை இறக்கி அடுத்து கோலி, ராகுல், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா பினிஷிங் டச் என்று மாற்றினால் இன்னும் கொஞ்சம் ஆழம் கிடைக்கும். அய்யரைத் தூக்கி விட்டு சூரிய குமார் யாதவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்படி ரேடிக்கலாக கோலி மாற்றமாட்டார், தொசுக்கு தொசுக்கென்று ஏதாவது மாற்றம் செய்து யாரையும் செட்டில் ஆக விட மாட்டார்.

இங்கிலாந்தின் மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோர்டான் ஆகியோரின் மணிக்கு 150 கிமீ வேகப்பந்துக்கு பதில் உள்ளதா என்று தெரியவில்லை. குட்லெந்தில் 150 கிமீ வேகத்தில் பந்தை இறக்கும் போது இந்திய பேட்ஸ்மென்களிடம் பதில் இல்லை. இந்த 3 போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது இங்கிலாந்து அணி டி20 போட்டிகள், அணித்தேர்வு குறித்து இந்திய அணி நிர்வாகத்தை விட தெளிவாக இருப்பது போல் தெரிகிறது.

மோர்கன் விராட் கோலியைக் காட்டிலும் பெட்டர் கேப்டன் என்பதை நிரூபித்து வருகிறார்.

இந்தியப் பந்து வீச்சில் உயிரோட்டமே இல்லை, புவனேஷ்வர் குமார், ஷர்துல், சாஹல் ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. வழக்கமான வழ வழா கொழ கொழா பவுலிங்காகவே உள்ளது. பும்ரா இல்லாத போது சிராஜுக்காவது வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்,. இப்போது சொத்தை பவுலிங்காக உள்ளது.

இந்தியா இன்று தோற்றால் உள்நாட்டில் 2வது டி20 தொடர் இழப்பாகும்.
Published by:Muthukumar
First published: