சிரிப்பும் விளையாட்டுமாகப் போய்க் கொண்டிருந்த பயிற்சியில் ஸ்டூவர்ட் பிராடுக்கு நேர்ந்த சோகம்: இனி ஆஷஸ் தொடர்தான்

ஆண்டர்சன் - பிராட்.

பயிற்சியின் போது முழங்காலில் அடிபட்டு இந்தியாவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரிலிருந்து முழுதும் விலகிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அடுத்து ஆஷஸ் தொடரில்தான் ஆட முடியும் என்று கூறியுள்ளார்.

 • Share this:
  பயிற்சியின் போது முழங்காலில் அடிபட்டு இந்தியாவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரிலிருந்து முழுதும் விலகிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அடுத்து ஆஷஸ் தொடரில்தான் ஆட முடியும் என்று கூறியுள்ளார்.

  நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஒரு விக்கெட்டைத்தான் கைப்பற்றினார் அதோடு சரியாக வீசவில்லை, விக்கெட் எடுக்கத் திணறினார், ரன்களையும் சீராக வழங்கினார்.

  அதனால் இவரை உட்காரவைத்து விட்டு மார்க் உட்-ஐ கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் இங்கிலாந்தில் ஒலிக்கத் தொடங்கின.

  இந்நிலையில் தன் காயம் பற்றி ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில், “விஷயங்கள் எவ்வளவு விரைவாக மாறி விடுகின்றன! கொஞ்ச நேரம் முன்னால்தான் சிரிப்பும் கூத்துமாக பயிற்சி செய்து கொண்டிருந்தோம்.

  ஆனால் ஒரு தடையைத் தாண்டி எகிறிக் குதித்தேன் குதிக்கும் போது தாறுமாறகா கால் போய் லேண்ட் ஆக என் வலது முழங்காலில் படுகாயம் ஏற்பட்டது, அதாவது வலுவான தாம்புக்கயிற்றினால் என் காலில் பின் பகுதியில் விளாசினால் எப்படி வலிக்கும் அப்படி ஒரு வலி.

  உண்மையில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் என்னை ஏன் கயிற்றால் அடித்தாய் என்று கேட்கத்தான் நினைத்துத் திரும்பினேன் ஆனால் அருகில் யாரும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

  ஸ்கேனில் கிரேட் 3 ரக காயம் என்று தெரிந்தது. இந்தியா தொடர் அவ்வளவுதான் என்று புரிந்தது, இனி ஆஷஸ்தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆஷஸ் தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் டிசம்பரில் தொடங்குகிறது.
  Published by:Muthukumar
  First published: