முகப்பு /செய்தி /விளையாட்டு / #LordShardul | ‘லார்ட்’- ஷர்துல் தாக்கூர் எனும் ‘ஆசிரியன்’ - சேவாக் தாராளம்

#LordShardul | ‘லார்ட்’- ஷர்துல் தாக்கூர் எனும் ‘ஆசிரியன்’ - சேவாக் தாராளம்

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

ஓவல் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் கலக்கி விட்டார், முதல் இன்னிங்சில் அதிரடியாக 57 ரன்கள் எடுத்ததோடு இரண்டாவது இன்னிங்சில் 60 ரன்களை நிதானமாக எடுத்துக் காட்டி அசத்தினார்.

  • Cricketnext
  • 1-MIN READ
  • Last Updated :

ஓவல் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் கலக்கி விட்டார், முதல் இன்னிங்சில் அதிரடியாக 57 ரன்கள் எடுத்ததோடு இரண்டாவது இன்னிங்சில் 60 ரன்களை நிதானமாக எடுத்துக் காட்டி அசத்தினார்.

இந்தியாவில் இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகளில் அதிரடியாக ஆடுவதற்கோ நிதானமாக ஆடுவதற்கோ இந்த டவுன் ஆர்டரில் கபில்தேவுக்குப் பிறகு ஒருவரும் வரவில்லை, இர்பான் பத்தான் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தார், ஆனால் அவரது கரியர் காயத்தினால் பாதியில் முடிந்தது. பிறகு ஹர்திக் பாண்டியா நம்பிக்கை அளித்தார் ஆனால் அவரும் காயம் காரணமாக அவதியுற்று டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்புவது கடினமாகியுள்ளது. எனவே இப்போதைக்கு ஷர்துல் தாக்கூர்தான்.

ஷர்துதல் தாக்கூரிடம் டாப் பேட்ஸ்மென்களிடம் உள்ள தடுப்பாட்ட உத்தி, அருமையான டைமிங், அதிரடி பேட்டிங் எல்லாமே கலந்து உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதங்களை எடுத்து அவர் அனைவரையும் அசத்தியிருக்கிறார், பவுலிங்கில் இன்னும் கொஞ்சம் பங்களித்தால் நிச்சயம் அவர் ஒரு நிரந்தர உறுப்பினராகி விடுவதோடு மூன்று வடிவங்களுக்குமான ஒரு வீரராகவும் அவர் திகழ்வார்.

இந்நிலையில் ரசிகர்களும் சேவாக்கும் ஷர்துல் தாக்கூரை ‘லார்ட்’ என்றும் ‘மிடில் ஆர்டருக்கு எப்படி ஆட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார். அபாரமான 60 ரன்கள். ஆசியர் தினத்தன்று என்ன ஒரு பரிசு’ என்று விதந்தோதியுள்ளார் சேவாக்.

வாசிம் ஜாஃபர் கூறும்போது, “அவர் எப்போது இறங்கினாலும் கிரிக்கெட்டில் ஒரு மாற்றம் விளைகிறது” என்று ஷர்துலைப் புகழ்ந்துள்ளார். இன்னும் சில நெட்டிசன்கள் ஹர்திக் பாண்டியாவை விட நீண்ட நாளைய ஆல்ரவுண்டட் தீர்வு ஷர்துல் தாக்கூதான் என்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: India Vs England, Shardul thakur, Virender sehwag