எங்கள் போட்டிக்கு முன்பாக டெஸ்ட்டை முடித்தீர்கள் பாருங்கள், பிரமாதம் : வீராங்கனை ட்வீட்டுக்குப் பதிலளித்த ரோரி பர்ன்ஸ்-க்கு எச்சரிக்கை

எங்கள் போட்டிக்கு முன்பாக டெஸ்ட்டை முடித்தீர்கள் பாருங்கள், பிரமாதம் : வீராங்கனை ட்வீட்டுக்குப் பதிலளித்த ரோரி பர்ன்ஸ்-க்கு எச்சரிக்கை

ரோரி பர்ன்ஸ்

அலெக்ஸ் ஹார்ட்லிக்கு ரோரி பர்ன்ஸ் செய்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டு விட்டது, இருந்தாலும் ரோரி பர்ன்ஸை இங்கிலாந்து கிரிகெட் நிர்வாகம் எச்சரித்துள்ளது,

 • Share this:
  அகமதாபாத் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள்ளாக ஒன்றரை நாளில் முடிந்ததையடுத்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை அலெக்ஸ் ஹார்ட்லி மேற்கொண்ட ட்வீட் குறித்த சர்ச்சையில் சிக்கி இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி கேப்டன் ரோரி பர்ன்ஸ் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

  அலெக்ஸ் ஹார்ட்லிக்கு ரோரி பர்ன்ஸ் செய்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டு விட்டது, இருந்தாலும் ரோரி பர்ன்ஸை இங்கிலாந்து கிரிகெட் நிர்வாகம் எச்சரித்துள்ளது, என்ன இருந்தாலும் பிசிசிஐ பணபலம் வாய்ந்த ஒரு வாரியம் அதை கிண்டல் செய்யுமாறு டிவீட் செய்தால் சும்மா விடுவார்களா? கிரிக்கெட்டை விடவும் பணம் பெரிதல்லவா?

  நியூஸிலாந்துக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெறவுள்ள நிலையில் அகமதாபாத் டெஸ்ட்டில் ஒன்றரை நாளில் தோற்ற இங்கிலாந்து அணி குறித்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை அலெக்ஸ் ஹார்ட்லி, “மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக ஆடவர் டெஸ்ட் போட்டியை முடித்தது பிரமாதம்” என்று டிவீட் செய்திருந்தார்.

  இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ், “பெரிய ஏமாற்றம்தான், இங்கிலாந்து ஆடவர் அணியின் அனைத்து வீரர்களும் மகளிர் கிரிக்கெட்டுக்கு இப்படி ஆதரவு அளித்துள்ளார்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

  இந்த ட்வீட்டுக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் அனைவரும் லைக் போட்டு வரவேற்றுள்ளனர்.

  இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரோரி பர்ன்ஸிடம் பேசி எச்சரித்தது, இதனையடுத்து ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.

  ஆனால் ஹார்ட்லி தன் ட்வீட்டின் நோக்கத்தைத் தெளிவு படுத்தி பதிவிட்டபோது, “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. எந்த ஒரு புண்படுத்தும் நோக்கோடு சொல்லவில்லை, நாங்களெல்லாம் டெஸ்ட் மேட்ச் ரசிகர்கள்தான்” என்று ட்வீட் செய்துள்ளார்.

  இந்த சர்ச்சை தொடர்பாக இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர் உட் தெரிவிக்கும் போது, ‘சமூக ஊடகங்களில் நடப்பதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்க முடியாது. அடுத்த டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

  ரோரி பர்ன்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டு ஜாக் கிராலி அவரது இடத்தை நிரப்பியது குறிப்பிடத்தக்கது.

  அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 112 மற்றும் 81 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.  அறிமுக ஸ்பின்னர் அக்சர் படேல் 11 விக்கெட்டுகளைச் சாய்த்ததும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: