• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பொறுப்பற்ற முறையில் அவுட் ஆவது கோலியா, ரோகித் சர்மாவா?- சொல்லுங்கள் நெட்டிசன்களே!

பொறுப்பற்ற முறையில் அவுட் ஆவது கோலியா, ரோகித் சர்மாவா?- சொல்லுங்கள் நெட்டிசன்களே!

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

ஒரே மாதிரியாக அவுட் சைடு எட்ஜ் எடுத்து தொடர்ந்து அவுட் ஆகும் விராட் கோலியை ஒன்றும் கலாய்க்காமல் நன்றாக ஆடி ஒரு ஆக்ரோஷ புல், ஹூக் ஷாட்டில் அவுட் ஆவதால் ரோகித் சர்மாவை நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

  • Share this:
ஒரே மாதிரியாக அவுட் சைடு எட்ஜ் எடுத்து தொடர்ந்து அவுட் ஆகும் விராட் கோலியை ஒன்றும் கலாய்க்காமல் நன்றாக ஆடி ஒரு ஆக்ரோஷ புல், ஹூக் ஷாட்டில் அவுட் ஆவதால் ரோகித் சர்மாவை நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

இது நெட்டிசன்களின் கிரிக்கெட் நுட்பமின்மையை  காட்டுவதாகும்.

தூக்கி அடித்து அவுட் ஆனால் பொறுப்பற்ற ஷாட், தொடர்ந்து எட்ஜ் ஆகி அவுட் ஆனால் அது பவுலரின் பிரமாதம், கோலி என்ன செய்வார் பாவம் என்ற எண்ணங்கள் தற்கால கிரிக்கெட் ரசிகர்களிடம் தலைதூக்கியுள்ளது. உண்மையில் ரோகித் சர்மா ஆக்ரோஷம் காட்டியதில் தப்பில்லை, அவர் ஷாட் அடித்த இடம் தான் தப்பு.

Also Read:புஜாராவின் ஒன்றுக்கும் உதவாத இன்னிங்ஸ்! - லார்ட்ஸ் ‘டெட்’ பிட்சிலும் சொதப்பிய ‘சூப்பர் ஸ்டார்’ இந்திய பேட்டிங்!

ஆனால் கோலி தொடர்ந்து அவுட் சைடு எட்ஜில் ஸ்லிப், விக்கெட் கீப்பரிடம் அவுட் ஆவதுதான் பொறுப்பற்ற தன்மை. கவர் டிரைவ் ஆடி பவுண்டரி அடித்து விட்டால் ஆகா நாம் பார்மில் இருக்கிறோம் என்று நினைத்து பெருமை அடைவதுதான் விராட் கோலியின் பலவீனம், உண்மையில் கவர் டிரைவ் ஆடவிடுகிறார்கள், அதன் மூலம் பொறி வைக்கிறார்கள், வலை விரிக்கிறார்கள், அதுதான் விராட் கோலிக்கு நடக்கிறது. இது புரியாமல் ஆடுவதுதான் திமிர்த்தனம். ரோகித் அவுட் ஆவது அல்ல.



நேற்று ரோகித் சர்மா மார்க் உட் ஷார்ட் பிட்ச் பந்தை சிக்ஸ் அடித்தார், மீண்டும் அதே பந்து அல்ல இந்தப் பந்து லெக் ஸ்டம்பில் வீசப்பட்டது, இதனை இன்னும் பின்னால் சென்று பைன்லெக்கில் அடித்திருந்தால் நல்ல ஷாட்டாகியிருக்கும். ஆனால் அவர் முதல் சிக்ஸ் அடித்தது போலவே இப்போதும் ஆடினார், ஆனால் சிக்ஸ் அடித்த பந்து ஆஃப் ஸ்டம்பில் வந்தது, அவுட் ஆன பந்து லெக் ஸ்ட்ம்பில் வந்தது, ஒரே ஸ்ட்ரோக்கை அப்ளை செய்ததுதான் ரோகித்தின் தவறு.

Also Read: மே.இ.தீவுகளுக்கு 12 புள்ளிகள், பாகிஸ்தான் சைபர்- கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி

ஆனால் கோலியின் தவறு அவரது கிரிக்கெட்டுக்கே உலை வைப்பது. தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் தொடங்கி, ஜேம்ஸ் ஆண்டர்சன், இளம் பவுலர் கைலி ஜேம்சிசன், இப்போது பொடியன் சாம் கரன் வரை அவரை எடுக்க முடிவது கோலியின் பொறுப்பற்ற ஆட்டத்தினால்தானே தவிர அவர் ஏதோ நல்ல பந்தில் ஆட்டமிழந்தார் என்பதல்ல.

ஆனால் நெட்டிசன்கள் பலர் ரோகித் சர்மா அவுட் ஆன ஷாட் பொறுப்பற்ற ஷாட் என்று கொந்தளிக்கின்றனர், விராட் கோலியை சும்மா விட்டுவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரோகித் சர்மாவுக்கு பவுன்சருக்கு எப்படி குனிவது என்று தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர், ஆனால் கோலிக்கு பந்தை எப்படி ஆடாமல் விடுவது என்று தெரியவில்லை என்று ஒரு கிண்டல் கூட வருவதில்லை. இது தற்கால கிரிக்கெட் ரசிகர்களின் ஒன்று அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது ரோகித் சர்மா மும்பை வீரர் என்பதாலான பாரபட்ச கருத்தாக இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: