• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs Eng | ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு - தகவல்

IND vs Eng | ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு - தகவல்

ரோஹித் சர்மா - ரிஷப் பந்த்

ரோஹித் சர்மா - ரிஷப் பந்த்

ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட மூவரும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இருந்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

  • Share this:
    இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு பின் 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமாதபாத் மைதானத்தில் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பின் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மார்ச் 23-ம் தேதி புனேவில் நடைபெற உள்ளது.

    ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட மூவரும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இருந்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இவர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடுகின்றனர். தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தால் வீரர்கள் மனதளவில் சோர்வடைவார்கள்.

    ஐ.பி.எல் 2021 தொடருக்கு முன் ஓய்வு வேண்டுமென்பதால் ஒரு நாள் தொடரில் இவர்கள் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு பதிலாக டி20 தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஒரு நாள் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: