• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs ENG | பேட்டிங்கின் போது காயம்.. ரத்தம் கசிந்த கையோடு விளையாடிய ரோஹித் சர்மா - வீடியோ

IND vs ENG | பேட்டிங்கின் போது காயம்.. ரத்தம் கசிந்த கையோடு விளையாடிய ரோஹித் சர்மா - வீடியோ

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

காயம் காரணமாக ரோஹித் சர்மா 2-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவாரா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.

  • Share this:
    புனேவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து பவுலர் மார்க் உட் வீசிய பந்தில் ஹிட்மேன் ரோஹித் சர்மாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி புனே-வில் தொடங்கியது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃப்ல்டிங் என அனைத்திலும் அசத்திய இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுக வீரர்கள் குர்ணால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.

    குர்ணால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்கள் விளாசி அறிமுக போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய சாதனை படைத்தார். பிரசித் கிருஷ்ணா அறிமுக போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

    இந்த போட்டியின் போது தொடக்க வீரர் ரேஹித் சர்மாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் வீசிய பந்து வலது கை பலமாக தாக்கியது. இதனால் ரோஹித் சர்மாவின் கையில் ரத்தம் கசிந்துள்ளது. ரோஹித் சர்மா அப்போதும் பேட்டிங் செய்தார். பின் வலி அதிகமாக இருந்ததால் அவர் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. . மேலும் காயம் காரணமாக ரோஹித் சர்மா 2-வது போட்டியில் விளையாடுவாரா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.



    ரோஹித் சர்மா 42 பந்துளை எதிர்கொண்டு 28 ரன்கள் சேர்த்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தவான் 98 ரன்களில் அவுட்டாகி 2 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: