என்னையா கேலி செய்கிறீர்கள்?-6 விக். வீழ்த்தி இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அஸ்வின் எச்சரிக்கை

ரவிச்சந்திரன் அஸ்வின்

முதல் இன்னிங்சில் ‘இன்னும் விக்கெட் எடுக்கவில்லை’ என்று சர்ரே அணியினால் கேலி செய்யப்பட்ட அஸ்வின் பேட்டிங்கிலும் டக் அடித்து ஏமாற்றமளித்தார், ஆனால் 2வது இன்னிங்சில் சர்ரே அணிக்காக அற்புதமாக வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சோமர்செட் அணி 69 ரன்களுக்குச் சுருண்டது.

 • Share this:
  முதல் இன்னிங்சில் ‘இன்னும் விக்கெட் எடுக்கவில்லை’ என்று சர்ரே அணியினால் கேலி செய்யப்பட்ட அஸ்வின் பேட்டிங்கிலும் டக் அடித்து ஏமாற்றமளித்தார், ஆனால் 2வது இன்னிங்சில் சர்ரே அணிக்காக அற்புதமாக வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சோமர்செட் அணி 69 ரன்களுக்குச் சுருண்டது.

  இரண்டாவது இன்னிங்சில் சர்ரே அணி 106/4 என்று முடிய ஆட்டம் ட்ரா ஆனது. 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு வந்துட்டேன்னு சொல்லு என்று மெசேஜ் கொடுத்துள்ளார். இன்னொரு இடது கை ஸ்பின்னர் டேன் மொரியார்ட்டி 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஓவல் பிட்ச் ஸ்பின் சொர்க்கமாகத் திகழ்ந்தது.

  69 ரன்களுக்கு சுருட்டியதை அடுத்து சர்ரே அணிக்கு வெற்றி இலக்கு 259 ரன்கள் 57 ஓவர் மீதமிருந்தது. ஆனால் 106/4 என்று ஆட்டம் ட்ரா ஆனது.

  இதையும் படிங்க: இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்- தனிமைப்படுத்தப் பட்டார்

  புதிய பந்தில் வீசிய அஸ்வின் பிரமாதமான ஒரு ஹை கிளாஸ் ஸ்பின் பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அஸ்வினுக்கு இப்போது இந்தியக் குழிப்பிட்சுக்கும் உண்மையான ஸ்பின் பிட்சுக்கும் ஆன வித்தியாசம் தெரிந்திருக்கும். பவுலர்களின் காலடித் தடத்தில் பட்டு பந்துகள் நன்றாகத் திரும்பின. உலகத்தரம் வாய்ந்த அஸ்வினின் ஸ்பின்னுக்கு சோமர்செட் பேட்ஸ்மென்கள் திணறினர். ஒன்றும் செய்ய முடியவில்லை.

  60/7 என்று ஆன சோமர்செட் 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலக்கை விரட்ட சர்ரே அணி முயற்சி செய்யவில்லை. 106/4 என்று ட்ரா ஆனது. அஸ்வின் பேட்டிங்கில் இறங்கி 2 பந்துகள் சந்தித்தார். ரன் எதுவும் இல்லை அப்போது இருதரப்பு கேப்டன்களும் கைக்குலுக்கிக் கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தியாவுக்கு இங்கிலாந்து வந்திருந்த போது சென்னை டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்றவுடன் உண்மையான ஸ்பின் பிட்சைப்போடாமல் 2வது பந்தே மண் பெயர்ந்து வரும் பிட்சை போட்டு காலி செய்தனர், இதை ஸ்பின் பிட்ச் என்று வேறு அஸ்வின் போன்றவர்கள் ஜால்ரா தட்டினர். இதோடு இங்கிலாந்து சென்றால் பவுன்ஸ் பிட்ச் போட்டு நம்மை காலி செய்யவில்லையா என்று அபத்த வாதங்களையும் முன்வைத்தனர். இங்கிலாந்து வானிலையே ஸ்விங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதுதானே தவிர இங்கிலாந்தில் பந்துகள் பெரிய அளவில் பவுன்ஸ் எல்லாம் ஆகாது.
  Published by:Muthukumar
  First published: