Eng vs Ind-ரோஹித் சர்மாவுக்குப் பதில் கோலி கேப்டன்?- தேவையில்லாமல் மயங்க் அகர்வால் சேர்ப்பு
Eng vs Ind-ரோஹித் சர்மாவுக்குப் பதில் கோலி கேப்டன்?- தேவையில்லாமல் மயங்க் அகர்வால் சேர்ப்பு
மயங்க் அகர்வால்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கோவிட்-19 காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை 1ம் தேதிக்குள் அவரால் ஆட முடியாமல் போனால் என்ன ஆவது என்று மாற்று வீரராக மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கோவிட்-19 காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை 1ம் தேதிக்குள் அவரால் ஆட முடியாமல் போனால் என்ன ஆவது என்று மாற்று வீரராக மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் தற்போது துணைக் கேப்டன் யாரும் இல்லை, முன்பு பும்ரா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டார், பிறகு ரிஷப் பண்ட் டி20 கேப்டன் ஆனார், அதனால் இவர்களில் யாராவது ஒருவர் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிக்குள் உடல் நலம் தேறவில்லை எனில் கேப்டனவார்கள் என்று கூறப்படுகிறது.
இன்னொரு தகவலும் என்ன கூறுகிறது எனில் கோலி கேப்டன்சியில்தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2-1 என்று முன்னிலை வகித்து ஆதிக்கம் செலுத்தினோம், எனவே அவர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று ஒருசிலர் கருதுவதாகவும் தெரிவதால் 5வது டெஸ்ட் போட்டி விராட் கோலி தலைமையில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக மிகக் குறைவு என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அகர்வால் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் 60 ரன்கள் எடுத்தார், அதன் பிறகு டெஸ்ட்டில் அவர் செம சொதப்பல் எப்படி என்கிறீர்களா? அந்த 60 ரன்களுக்குப் பிறகு மயங்க் அகர்வாலின் ஸ்கோர் இதோ: 4, 26, 23, 15, 7, 33, 4, 22, அதாவது 8 இன்னிங்ஸ்களில் 134 ரன்கள்.
உண்மையில் இவர் தேவையே இல்லை. ஏனெனில் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அருமையாகவே பயிற்சி ஆட்டத்தில் ஆடினார். அவரையே வைத்துக் கொள்ளலாம், மயங்க் அகர்வாலெல்லாம் இந்திய பிட்சிலேயே எட்ஜ் ஆகி அவுட் ஆகிறவர், இவரைப்போய் அதுவும் இப்போது பேய் பார்மில் இருக்கும் இங்கிலாந்திடம் விட்டால் என்ன ஆகும்? ஜாம்பவான்கள் கதியே சந்தேகமாக இருக்கும் போது, நிச்சயம் மயங்க் அகர்வால் தேவையில்லாத லக்கேஜ்தான் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.