ஓவல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகு பும்ராவின் தாக்குதல் ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கர்களும், ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சும் இந்திய அணியின் வெற்றிக்கதவுகளைத் திறக்க இங்கிலாந்து 77/0-லிருந்து 210க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவ இந்திய அணி அபாரமாக 2-1 என்று டெஸ்ட் தொடர் முன்னிலைப் பெற்றது.
ஷர்துல் தாக்கூர் காலையில் ரோரி பர்ன்ஸை அற்புதமான ஆஃப் கட்டரில் வெளியேற்ற பிறகு ஆல்ரவுண்டர் ஷர்துல் பின்னால் இந்தியாவுக்கும் வெற்றிக்கும் இடையில் நின்ற ஜோ ரூட்டை பவுல்டு ஆக்கினார். மொத்தத்தில் ஒரு கிரேட் வின் இது, மிகப்பிரமாதமான ஒரு பந்து வீச்சு, 80களின் மே.இ.தீவுகள், அக்ரம் வக்கார் உள்ள பாகிஸ்தான் பந்து வீச்சு, மெக்ரா, ஷேன் வார்ன் உள்ள ஆஸ்திரேலியா பந்து வீச்சு என்று இதை என்ன வேண்டுமானாலும் கூறலாம். அப்படிப்பட்ட வெற்றி, மறக்க முடியாத வெற்றியாகும் இது.
இங்கிலாந்து அணி 312/6 என்ற இந்திய 2வது இன்னிங்ஸ் ஸ்கோரில் ஆட்டத்தைக் கோட்டை விட்டது, கேட்சை கோட்டைவிட்டது, கடைசி 4 விக்கெட்டுகள் சேர்ந்து 154 ரன்கள் எடுத்ததுதான் இங்கிலாந்து தோற்ற ரன் இடைவெளியாகும் (157). இதை அவர்கள் யோசிப்பார்கள்.
இதையும் படிங்க: ஓவலில் சுருண்டது இங்கிலாந்து... இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இந்நிலையில் பந்து ஒரு புறம் வெயிட் அதிகரித்த நிலையில் பும்ரா, கோலியிடம் சென்று பந்தைக் கொடு நான் வீசுகிறேன் என்று கூறியதாக விராட் கோலி பிற்பாடு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கூறினார். பும்ரா 100 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை புரிந்தார். ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடைசியில் அஸ்வினைத் தேர்வு செய்யவில்லை என்ற கடும் விமர்சனத்தை சந்தித்த கோலி தான் தேர்வு செய்த அணிக்கு நியாயம் கற்பித்து விட்டார்.
இந்நிலையில் வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:
கிட்டத்தட்ட 100 ரன் முதல் இன்னிங்ஸ் பின்னடைவிலிருந்து எழுந்து வந்து வெற்றி பெறுவதெல்லாம் அணியின் குணாம்சத்தையும் வலுவான உறுதியையும் காட்டுகிறது. லார்ட்ஸ் டெஸ்ட்டிலும் இதைத்தான் கூறினேன். இந்திய கேப்டனாக டாப் 3 பவுலிங் நிகழ்த்துதலை பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் 3 நாட்கள் போல் களம் ஈரமாக இல்லை. பந்து நன்றாகவே வந்தது. பந்தின் ஒரு பக்கம் கனமாக இருந்தது. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் அழகாக உட்கார்ந்தது. 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை கொண்ட அணியாகும் இது.
ஜஸ்பிரித் பும்ரா நம்ப முடியாத ஸ்பெல். 22 ஓவர்கள் 27 ரன்கள் அதுவும் இந்தப் பிட்சில் உண்மையில் பெரிய விஷயம். பந்து ரிவர்ஸ் ஆகத்தொடங்கியவுடன் பும்ரா என்னிடம் வந்து பந்தைக் கொடுங்கள் வீசுகிறேன் என்றார். ரோகித் இன்னிங்ஸ் தனித்துவமானது. ஆனால் தாக்கம் ஏற்படுத்திய ஆட்டம் என்றால் பின்வரிசை பேட்டிங். ஷர்துல் தாக்கூரின் அரைசதம் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. 2வது இன்னிங்சில் எதிர்த்தாக்குதல் பேட்டிங் பெரிய தாக்கம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, India Vs England, Jasprit bumrah, Ravindra jadeja, Shardul thakur