Oval test: ஷர்துல் தாக்கூர்-ரிஷப் பந்த் சதக்கூட்டணி: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு- இங்கிலாந்து ஃபைட்பேக்

ஓவல் டெஸ்ட்- இந்தியாவுக்கு தேவை 10 விக்கெட்டுகள்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான நேற்று ஷர்துல் தாக்கூர், ரிஷப் பந்த் 7வது விக்கெட்டுக்காக 100 ரன்கள் கூட்டணி அமைக்க இந்திய அணி 368 ரன்கள் முன்னிலை பெற்று, வெற்றி வாய்ப்பில் உள்ளது, ஆனால் இங்கிலாந்தும் விடவில்லை ஆட்ட முடிவில் 77 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் ஃபைட் கொடுக்கிறது.

 • Share this:
  இந்திய அணி 2வது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்தது. 1979க்குப் பிறகு ஓவலில் 2வது இன்னிங்சில் இந்திய அணி 100 ஓவர்களுக்கும் மேல் ஆடி சாதனை படைத்தது. அப்போது ஓவரில் கவாஸ்கர் 221 ரன்கள் விளாச 438 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி இந்தியா 429/8 என்று ட்ரா ஆனது. இப்போது இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு என்பதால் டெஸ்ட் போட்டி பரபரப்பான நிலையில் உள்ளது., இந்தியாவுக்குத் தேவை 10 விக்கெட்டுகள், இங்கிலாந்துக்குத் தேவை இன்னும் 291 ரன்கள்.

  இந்திய அணியில் தாக்கூர் 60 ரன்கள் விளாசினார். இவர் ஆடிய ஸ்ட்ரெய்ட் ட்ரைவ்கள் முன்னிலை பேட்ஸ்மென்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும், ரிஷப் பந்து அடிக்கப் போகிறார் என்று ரூட் தப்பாக பரந்த களமாக அமைக்க அவர் பெப்பே காட்டி நிதானமாக ஆடி 50 ரன்கள் எடுத்து கடைசியில் மொயின் அலி பவுலிங்கில் அவரிடமே கேட்ச் ஆனார்.

  4ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஹமீத் (43), பர்ன்ஸ் (31) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். பிட்சில் பவுலர்களுக்கு ஒன்றுமில்லை. முயற்சி எடுத்து வீசினார்ல் கொஞ்சம் பவுன்ஸ் கிடைக்கும். ரவீந்திர ஜடேஜாவுக்கு பந்துகள் பவுலர்கள் காலடித் தடத்தில் பட்டு திரும்புகின்றன. இந்தியாவுக்கு ஒரு ரிவியூவும் காலியாகிவிட்டது, வேஸ்ட் செய்தவர் சிராஜ், ஹசீப் ஹமீது எல்பி என்று நினைத்து விரயம் செய்தார்.

  விராட் கோலி பிரமாதமான ராஜகவர் ட்ரைவ்களுடனும் நிதானத்துடனும் ஆடி 44 ரன்கள் எடுத்திருந்த போது மொயின் அலி பந்து ஒன்றை பின்னால் சென்று ஆடுவதற்கு பதிலாக காலை நீட்டிப் போட்டு மட்டையை நீட்ட எட்ஜ் ஆகி கேட்சில் வெளியேறினார். அப்போது இந்தியா 213 ரன்கள்தான் முன்னிலை பெற்றிருந்த போது இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

  தாக்கூர் 2வது இன்னிங்சிலும் அரைசதம்


  அப்போதுதான் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் சேர்ந்தனர். ரிஷப் பந்த் தன் விக்கெட்டை தூக்கி எறியாமல் பொறுப்புடன் ஆடி அரைசதம் எடுத்தார். இங்கிலாந்தின் பந்து வீச்சும் களைப்படைய இருவரும் சதக்கூட்டணி அமைத்து இங்கிலாந்திடமிருந்து ஆட்டத்தை கொண்டு சென்றனர். தாக்கூர் ஜேம்ஸ் ஆண்டர்சனையே மிட் விக்கெட் மீது தூக்கி அடித்தார். தாக்கூர் அடிக்குப் பயந்து ஸ்லோயர் ஒன் வீசினார் ஆலி ராபின்சன் அது லாங் ஆஃப் மேல் சிக்ஸ் ஆனது. 65 பந்துகளில் அரைசதமெடுத்த தாக்கூர் தன் 4வது டெஸ்ட்டில் 3வது அரைசதம் எடுத்தார்.

  ஜோ ரூட் பவுலிங் வீச வந்தார் கோலி போலவே தாக்கூருக்கும் வெளி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. பந்த் 105 பந்துகளில் அரைசதம் கண்டு மொயின் அலியை இறங்கி வந்து அடித்தார் ஆனால் அதை மொயின் அலியே கேட்ச் பிடித்து விட்டார். உமேஷ் யாதவ் மொயின் அலியை பெரிய சிக்ஸ் அடிக்க, பும்ரா ஸ்லாக் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி விளாசினார். இன்று காலை ஜடேஜா சுத்த வேஸ்ட்டாக ஆடினார். முதுகுக்குப் பின்னால் ராஜாவாக இருக்கிறார். ஒரு ஷாட் கூட கவரிலோ, வி என்று கூறப்படும் மிட் ஆன் மிட் ஆஃபிலோ அவருக்கு ஆட வரவில்லை. கடைசியில் அசிங்கமாக எல்.பி.ஆகி 17 ரன்னில் வெளியேறினார். அஜிங்கிய ரகானே கதை முடிந்தது, நல்ல வேளையாக அவர் டக் அவுட் ஆனார். இல்லையெனில் 40 ரன்கள் எடுத்து விட்டு பங்களிப்பு செய்தேன் என்பார்.

  இன்று 5ம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமையவுள்ளது. இங்கிலாந்து ட்ராவுக்குத்தான் ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.
  Published by:Muthukumar
  First published: