• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தினேஷ் கார்த்திக் நம்பிக்கையைப் பொய்க்கச் செய்த விராட் கோலி

தினேஷ் கார்த்திக் நம்பிக்கையைப் பொய்க்கச் செய்த விராட் கோலி

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

விராட் கோலியிடம் பொதுவான ஒரு பிடிவாதக் குணத்தைப் பலரும் கவனிக்கத் தவறவிட்டு விடுவார்கள். அது என்னவெனில் மீடியாவும் முன்னாள் வீரர்க்ளும் அணியில் ஏதேனும் மாற்றம் சொன்னால் அதை செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.

  • Share this:
விராட் கோலியிடம் பொதுவான ஒரு பிடிவாதக் குணத்தைப் பலரும் கவனிக்கத் தவறவிட்டு விடுவார்கள். அது என்னவெனில் மீடியாவும் முன்னாள் வீரர்க்ளும் அணியில் ஏதேனும் மாற்றம் சொன்னால் அதை செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.

ஓவல் டெஸ்ட் போட்டியில் பிட்ச் போகப்போக கொஞ்சம் வறளும் அதனால் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினைச் சேர்க்க வேண்டும் என்று அனைவரும் கதறினர். மேலும் இங்கிலாந்து அணியில் 4 இடது கை வீரர்கள் உள்ளனர். அதனால் அஸ்வின் இடம்பெற வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து கூறினர்.

தினேஷ் கார்த்திக் தன் டெய்லி டெலிகிராப் பத்தியில் இவ்வாறு கூறினார், “லண்டன் ஓவல் டெஸ்டில் அஸ்வின் இந்திய அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என நம்புகிறேன். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் தட்டையானது ஓவல் மைதானம், இந்த சீசனுக்கும் எந்த மாற்றமும் இருக்காது. இதற்கு முன் நடந்த கவுன்டி போட்டிகளில் சர்ரே அணி மோதிய 3 ஆட்டங்கள் முடிவில்லாமல் இருந்தாலும், அதில் 10 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆதலால், பேட்டிங்கிற்கும், சுழற்பந்துவீச்சுக்கும் இந்த மைதானம் நன்கு ஒத்துழைக்கும்.

நான் விராட் கோலியாக இருந்தால், இதுபோன்ற முக்கியமான டெஸ்டில் புதிய பரிணமாங்களை அறிமுகம் செய்திருப்பேன். அஷ்வின் சிறந்த பந்துவீச்சாளர், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த ஆடுகள உதவி தேவையில்லை.

அஸ்வின் போன்ற ஆஃப் ஸ்பின்னர்கள் பந்துவீச்சை இடதுகை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது சிரமம். அதுமட்டுமல்லாமல் வலது கை பேட்ஸ்மேன்களும் அஷ்வின் பந்துவீச்சை எளிதாக விளையாடிவிட முடியாது.

அஷ்வின் பந்துவீச்சை ஆஸ்திேரலியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன் இருவருமே பாராட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய ஆடுகளங்களைப் போல், ஓவல் மைதானமும் அவருக்கு ஒத்துழைக்கும். என்னைப் பொறுத்தவரை அஷ்வினை வைத்தே முதல் ஓவரை கோலி தொடங்க வைக்கலாம். அஷ்வின் சிறப்பு என்னவென்றால், பந்து நன்றாக காற்றில் டாஸாகி பிட்ச்சாகும் போது பேட்ஸ்மேன்கள் கணித்து ஆட முடியாது, சிறிய தவறு செய்தாலும் விக்கெட்டை இழந்துவிடுவார்கள். புதிய பந்திலும் பந்துவீச அஷ்வின் தேர்ந்தவர்.

ஆதலால், முதல் ஒரு மணிநேரத்தில் விக்கெட் வீழ்த்த வேண்டுமென்றால் அஷ்வினுக்கு விராட் கோலி வாய்ப்பு வழங்கலாம். 4-வது டெஸ்ட் போட்டியில் அஷ்வின்இடம் பெற்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய துருப்புச் சீட்டாக இருப்பார்” என்று நீளமாக எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் விராட் கோலி இதையெல்லாம் படிப்பவரல்ல. பாடறியேன் படிப்பறியேன் என்று தன்னிச்சையாக முடிவு எடுப்பவர், அதனால் அஸ்வினை எடுக்காமல் பலரது எதிர்பார்ப்பையும் பொய்த்துப் போகச் செய்துள்ளார், ஆனால் கோலியை நன்றாகத் தெரிந்தவர்கள் ஏமாந்துபோக வாய்ப்பில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: