முகப்பு /செய்தி /விளையாட்டு / Shardul Thakur| ஷர்துல் தாக்கூரிடமிருந்து கத்துக்கலாமே! 191 ரன்களுக்கு மடிந்த பிறகு உமேஷ், பும்ரா அபாரம்

Shardul Thakur| ஷர்துல் தாக்கூரிடமிருந்து கத்துக்கலாமே! 191 ரன்களுக்கு மடிந்த பிறகு உமேஷ், பும்ரா அபாரம்

ஷர்துல் தாக்கூர் சாதனை அதிரடி அரைசதம்

ஷர்துல் தாக்கூர் சாதனை அதிரடி அரைசதம்

ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 191 ரன்களுக்குச் சுருண்டது. ஷர்துல் தாக்கூர் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் என்று ஒரு கபில்தேவ் ரக அதிரடி இன்னிங்ஸை ஆடியதால் இந்திய அணி இந்த ஸ்கோரை எட்டியது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 191 ரன்களுக்குச் சுருண்டது. ஷர்துல் தாக்கூர் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் என்று ஒரு கபில்தேவ் ரக அதிரடி இன்னிங்ஸை ஆடியதால் இந்திய அணி இந்த ஸ்கோரை எட்டியது.

முன்னதாக கேப்டன் விராட் கோலி பிரமாதமான ராஜ கவர்ட்ரைவ், நேர் ட்ரைவ்களுடன் 50 ரன்கள் எடுத்து ராபின்சனின் பிரமாத பந்துக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார். பிற்பாடு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ் 5 ரன்களில் பும்ராவிடம் பவுல்டு ஆகி வெளியேற ஹசீப் ஹமீது பும்ராவின் லிஃப்டர் பந்தைத் தொட்டு பந்த்தின் அபார கேட்சுக்கு டக் அவுட் ஆனார், ஆனால் மிக மிக முக்கியமாக ஜோ ரூட் 4 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 21 என்று ஆக்ரோஷம் காட்டி ஆடி வந்தார். அப்போது உமேஷ் யாதவ் ஒரு அற்புதமான இன்ஸ்விங்கரை வீழ்த்தி ரூட்டை பவுல்டு செய்தார். இங்கிலாந்து ஆட்ட முடிவில் 53/3 என்று தடுமாறி வருகிறது.

ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்தில் அதிவேக அரைசத சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். தாக்கூர் மற்ற இந்திய வீரர்களுக்கு பாடம் எடுக்கும் விதமாக உறுடியான டிபன்ஸ் மற்றும் சந்தேகமற ஷாட்களை ஆடினார், அவருக்கு இங்கிலாந்து பவுலர்களின் பந்துகளை சந்திக்க நிறைய நேரம் இருந்தது போல் தெரிகிறது. நல்ல ஃபுட் வொர்க், சீனியர் பேட்ஸ்மென்கள் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முன்னதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் ஸ்பெல்லில் திணறினார் 4 ஓவர் 20 ரன் கொடுத்தார். இந்திய அணி ஸ்கோர் 28 ஆக இருந்த போது கிறிஸ் வோக்ஸ், ராபின்சன் 7 மெய்டன்களை தொடர்ச்சியாக வீசினர். இதில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் காலியாகினர். ரோகித் சர்மா எட்ஜ் செய்ய, ராபின்சனிடம் ராகுல் எல்.பி. ஆனார். புஜாரா தேறப்போவதில்லை என்பதற்கு இணங்க அவர் ஆண்டர்சனிடம் எட்ஜ் ஆகி வெளியேறினார். கோலி 22 ரன்களில் இருந்த போது மட்டையை நீட்டி எட்ஜ் செய்தார் ஆனால் ரூட் ஸ்லிப்பில் கேட்சை கோட்டை விட்டார்.

விராட் கோலி.

ஜடேஜாவை முன்னால் இறக்கிய ட்விட்ஸ் பயனளிக்கவில்லை. 10 ரன்களில் அவர் எட்ஜ் ஆகி வெளியேறினார், கோலி பிரமாதமான சில ராஜ கவர் ட்ரைவ்களை ஆடிக்கொண்டிருந்தார். 50 ரன்கள் எடுத்த கோலிக்கு ராபின்சன் டைட்டாக வீசி ஒரு 10 பந்துகள் அவரை ஆட்டினார். இதனால் உள்ளே வந்த ஒரு எழும்பிய பந்தை லெக் திசையில் திருப்பி விட நினைத்தார் கோலி ஆனால் பந்து எட்ஜ் ஆகி பேர்ஸ்டோ கையில் போய் உட்கார்ந்தது. இந்தியா 105/5.

ரகானே, ரிஷப் பந்த் தேறவில்லை. ரகானே ஓவர்டன் பந்தை நேராக கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்தார், ரிஷப் பந்த் வோக்ஸ் பந்தை இறங்கி வந்து கொடியேற்றி அவுட் ஆனார். அது ஸ்லோயர் ஒன்.

எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸ் ஒன்றை ரிஷப் பந்த் ஆடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு பந்த்தும் ஆலி ராபின்சன் பந்தில் கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்து வெளியேற இந்தியா 58-5 என்று ஆனது.

அப்போதுதான் ஷர்துல் தாக்கூர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. ஓவர்டன் பந்தில் மிட் ஆப் மேல் திகைப்பூட்டிய ஷாட்டில் சிக்ஸ் விளாசிய ஷர்துல், வோக்சை புரட்டி எடுத்தார் 6 பவுண்டரி 1 சிக்சரை அடித்தார் ஷர்துல். இவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தது 43-ல் பேர்ஸ்டோ கேட்சை விட்டார், சில ஷாட்கள் பீல்டருக்கு முன்னால் விழுந்தன.

ஆனால் நோக்கத்தில் தெளிவாக இருந்தார். ராபின்சன் பந்து ஒன்றை மிட் ஆஃப் மீது அடித்த பவுண்டரியை விட அடுத்த புல் ஷாட்டில் மிட்விக்கெட்டில் அடித்த சிக்ஸ் அபாரம், இதன் மூலம் 31 பந்துகளில் அரைசதம் கண்டார் தாக்கூர். கடைசியில் வோக்ஸ் பந்தில் எல்.பி.ஆனார். உடனேயே பும்ரா ரன் அவுட் ஆக, உமேஷ் யாதவ் எட்ஜ் ஆனார். கடைசி 3 விக்கெட்டுகளை 4 பந்துகளில் இழந்து இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்தில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட். ஆலி ராபின்சன் 3 விக்கெட். ஓவர்டன், ஆண்டர்சன் தலா 1 விக்கெட். இங்கிலாந்து 53/3. டேவிட் மலான் 26 நாட் அவுட். நைட் வாட்ச்மேன் ஓவர்டன் 1 நாட் அவுட் .

First published:

Tags: India Vs England, Shardul thakur